தமிழ் திரையுலகில் கடந்த 40 ஆண்டுகாலமாக மிகவும் முக்கியமான நடிகையாக வலம் வருபவர் நடிகை ராதிகா. வெள்ளித்திரை, சின்னத்திரை என இரண்டிலுமே கலக்கி வரும் நடிகை ராதிகாவின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய பக்கபலமாக இருந்தவர் நடிகர் கமல்ஹாசன்.



கமல் - ராதிகா நடிப்பில் தெலுங்கில் வெளியான திரைப்படம் 'ஸ்வாதி முத்யம்'. இப்படம் தான் பின்னர் தமிழில் சிப்பிக்குள் முத்து என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தில் ராதிகாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்ததோடு அவரின் திரைப்பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமைந்த ஒரு படம். இது தவிர தமிழில் 'பேர் சொல்லும் பிள்ளை' என்ற படத்தில் ராதிகாவும் கமலும் இணைந்து நடித்திருந்தனர்.


பல ஆண்டுகளுக்கு முன்னர் ராதிகா ஒரு ரியாலிட்டி ஷோ ஒன்றில் கலந்து கொண்டு இருந்த போது கமலுடன் நடித்த அனுபவம் குறித்து ஸ்வாரஸ்யமான அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருந்தார் ராதிகா. கமல்ஹாசன் மிகவும் ஸ்மார்ட்டானவர். செட்டில் நாங்க மயக்கம் போட்டு விழுந்தா கரெக்ட்டா கண்டு பிடிச்சுடுவாரு. எனக்கு லோ பிபி இருந்துது. அதனால அடிக்கடி ப்ளேக் அவுட் ஆகிவிடும். அப்படி இருந்ததால கமல் ஒரு நாள் வந்து என்கிட்டே ரெக்வஸ்ட் பண்ணி கேட்டாரு. இன்னிக்கு ஒரு நாள் நீ மயக்கம் போடுற மாதிரி ஆக்ட் பண்ணேன். நான் கொஞ்சம் ஷூட்டிங்கு டிமிக்கி குடுத்துட்டு வெளில போகணும் அப்படின்னு கேட்டார். அதெல்லாம் நான் பண்ண மாட்டேன் அப்படினு சொல்லிட்டேன். எனக்காக கொஞ்சம் பண்ணேன் ப்ளீஸ் மயக்கம் போட்டு விழு அப்படினு கமல் கேட்டார். நான் என்னால முடியவே முடியாது அப்படினு சொல்லிட்டேன். அப்படியே விட்டுட்டு போயிட்டார். அதுக்கு அப்புறம் இரண்டு மூணு நாள் கழிச்சு இரண்டு பேரும் ஷூட்டிங்கில் நடிச்சுக்கிட்டு இருக்கோம். அப்போ நான் திடீரென மயக்கம் போட்டு விழுந்துட்டேன்.


 



கண்ணை திறந்து பார்த்தேன். முதல்ல எனக்கு கமல் முகம் தான் முன்னாடி வந்து தெரிஞ்சுது. 'சனியன் எப்போ மயக்கம் போட்டு விழுன்னு சொன்னேன் அப்போ விழல... எப்போ வந்து மயக்கம் போட்டு விழுது பாரு' அப்படின்னு திட்டனாரு. எனக்கு ஒன்னுமே புரியல" என கூறி இருந்தார் ராதிகா.  


இப்படி அடிக்கடி ஷூட்டிங் செட்டில் நடப்பது உண்டு. அப்படி நடிகைகள்  மயக்கம் போட்டு விழுந்தால் அது உண்மையா இல்லை ஆக்டிங்கா என ஈஸியாக கண்டுபிடித்துவிடுவாராம் கமல். அவர் கேடிக்கெல்லாம் கேடி. ஸ்வாதி முத்யம் மற்றும் பேர் சொல்லும் பிள்ளை என இரு படங்களில் மட்டுமே அவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.