காதல் மற்றும் திருமண உறவில் மூன்றாம் நபரை நுழைய விடாதீர்கள் என நடிகை ராதிகா ஆப்தே எச்சரிக்கை விடுக்கும் வகையில் பேசியுள்ளார். 


கடந்த 2005 ஆம் ஆண்டு வாஹ் படத்தின் மூலம் இந்தி சினிமாவில் அறிமுகமான நடிகை ராதிகா ஆப்தே லைஃப் ஹோ தோ ஐசி, ராதிகா ஆப்தே அந்தஹீன், பத்லாபூர் , ஹன்டர்ர், மற்றும் மாஞ்சி - தி மவுண்டன் மேன் போன்ற படங்களில் நடித்து ரசிகர்களிடத்தில் பிரபலமானார். தமிழில் தோனி, ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச்செல்வன், கபாலி உள்ளிட்ட படங்களிலும் ராதிகா ஆப்தே நடித்துள்ளார். 






இதனையடுத்து சமீபத்தில் அவர் நடிப்பில் தமிழ் மொழியில் இருந்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்ட விக்ரம் வேதா படம் வெளியானது. இதில் தமிழில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்த வேடத்தில் ராதிகா ஆப்தே நடித்திருந்தார். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை  வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் அவர் சமீபத்தில் ஒரு நேர்காணலில் ஒரு நடிகைக்கான இமேஜூக்கு ஏற்ப வாழாதது தனது கேரியரில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்துள்ளார். 


மேலும் இந்தி படங்களில் பலவிதமான வேலைகளை செய்ய வேண்டும் என்று நினைத்தேன் ஆனால் அது நடக்கவில்லை என தெரிவித்தது ரசிகர்களிடையே பேசுபொருளானது. தற்போது ராதிகா ஆப்தே வாசன் பாலா இயக்கத்தில் மோனிகா ஓ மை டார்லிங் ரிலீசுக்காக காத்திருக்கிறார். இதில் ராஜ்குமார் ராவ் மற்றும் ஹீமா குரேஷி ஆகியோர் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளனர். இப்படம் நவம்பர் 11 ஆம் தேதி நெட்ஃபிளிக்ஸில் வெளியாகவுள்ளது. 






இந்நிலையில் நானும் என் கணவர் பெனடிக்ட்டும் அவரவர்க்கு பிடித்த மாதிரி சுதந்திரமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். தயவுசெய்து தம்பதியினர் அல்லது காதலர்கள் தங்கள் இணையுடன் ஏதாவது சண்டை சச்சரவு ஏற்பட்டால் மூன்றாம் மனிதரின் ஆலோசனையை பெறாதீர்கள். இது உங்கள் உறவிற்கு ஆபத்தாக முடியும். எப்போது முன்றாம் நபர் உள்ளே வருகிறாரோ அப்போதே உங்கள் உறவில் விரிசல் விழ தொடங்குகிறது. 


 நம்மை விட யாரும் நம் இணையை நன்றாக புரிந்து இருக்க முடியாது. அப்படி இருக்கும்போது  வாழ்க்கையில் நமது பிரச்சினையை எப்படி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்மைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள் என ராதிகா ஆப்தே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.