சீனியர் நடிகராகவும் , பா.ஜ.க அரசியல் பிரமுகராகவும் அறியப்படுபவர் ராதா ரவி. இவர் பிரபல நடிகர் எம்.ஆ.ராதாவின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. மைக்கை பிடித்தாலே சர்ச்சை என அறியப்படும் ராதாரவி மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். கனல் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ராதாரவி தற்போதைய சினிமா குறித்தும்,கனல் படம்குறித்தும் பேசினார். சமீபத்தில் வெளியாகி வசூல் வேட்டை செய்துவரும் விக்ரம் படத்தை புகழ்ந்து பேசினார். மேலும் பேசிய அவர், கண்ணாடியில் முகத்தைப் பார்க்காமல் சிலர் நடிக்க வருவதாக மறைமுகமாக குறிப்பிட்டார்.


அதுகுறித்து பேசிய அவர், ''அப்படித்தான் ஒருத்தரைச் சொன்னேன்.இவரு இப்ப டான்ஸ் ஆடுறார், படம் எடுத்துடுவார்னு சொன்னேன். இப்ப பார்த்தா படம் எடுத்துட்டார். உங்களுக்கு அதெல்லாம் தெரியும். யார் யாருனு? நான் பேரு சொல்லவில்லை. இந்த ஒரு படம் போதும்னு அவரு சொன்னாராம். கிடையாது, இந்த மேக்கப் போட்டிவிட்டார். முடிந்தது அவர் கதை. இதை திருப்பி ரோட்டில் கொண்டுவந்து விட்டால்தான் சரிவரும்.ஏன்னா பார்ப்பவனை கொடுமைப்படுத்துறல்ல, அந்த சாபம் வந்து விழும்ல. அத யோசிக்க வேண்டாமா? அதுக்கு 4 பேர வாழவைக்கிற மாதிரி படத்தை எடுத்த அவனுக்கு சோத்தப்போடேன்'' என்றார். பெயரைக் குறிப்பிடவில்லை என்றாலும் லெஜண்ட் படத்தில் வரும் சரவணனைத்தான் அவர் மறைமுகமாக குறிப்பிடுவதாகவும், யாரைக்குறித்தும் உருவக்கேலி என்பது ஏற்கத்தக்கதல்ல எனவும் சோஷியல் மீடியாவில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.




மேலும்பேசிய ராதாரவி, ''நான் வக்கீலுக்கு படித்தவன். என் தலையெழுத்து இங்க வந்து ஒக்காந்துகிட்டு இருக்கேன். நான் உண்மையை சொல்கிறேன். என்ன ஓடிடி? யாரும் ஒட்டாம பார்க்காம இருப்பது ஓடிடியா? சனங்க படத்த பார்க்கனும்.தியேட்டர  பார்த்து கைதட்டனும். ஓடிடியில்படத்தை வெளியிடும் பெரிய ஹீரோக்களுக்கு சொல்கிறேன், உனக்கு இவ்வளதான் சம்பளம் என ஓடிடி தீர்மானிப்பான். இல்லையென்றால் ஓடிடிக்குள் விடமாட்டான்.என்ன அது ஓடிடி?வீட்டுக்குள் ஒக்காந்து பார்ப்பது. இருக்கும் வியாதி போதாதா? பாதியிலேயே ஆஃப் செய்தும் விடுகிறார்கள். கதை ஏதும் புரியுமா? என்றார். நடிகை குறித்து பேசும்போது, ஒருமுறை ஏர்போர்ட்டில் தமன்னாவை பார்த்தேன். வணக்கம்சார் என்றார். நானும் சுற்றி சுற்றி பார்த்தேன். எங்காவது ஒருபக்கத்தில் கருப்பு இருக்கா என்று பார்த்தேன். அவ்வளவும் வெள்ளை. அப்படி கலரான பெண்ணாக இந்த நடிகை வந்தார். ஆனால் நடிப்பில் காவியத்தலைவி மாதிரி நடித்துள்ளார்'' 
என்றார்.


லெஜண்ட் சரவணன் தொடர்பான மறைமுக பேச்சு, தமன்னாவின் நிறம் தொடர்பான கருத்து என ராதாரவியின் மேடைப்பேச்சு இன்று பல்வேறு சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண