விஜய் டிவியில் 2011 ஆம் ஆண்டு ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற சீரியல் மூலம் தமிழில் என்ட்ரி கொடுத்தவர் ரச்சிதா மகாலட்சுமி. அதன் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனம் பெற்ற ரச்சிதா தொடர்ந்து இளவரசி, சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியார்புரம், நாம் இருவர் நமக்கு இருவர் சீசன் 2 உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்திருந்தார்.
பிக்பாஸ் பிரபலம்:
இதில் சரவணன் மீனாட்சி சீரியல் அவருக்கு தமிழில் ஏராளமான ரசிகர்களை பெற்றுக் கொடுத்தது. விஜய் டிவி மட்டுமின்றி சன் டிவி, ஜீ தமிழ், கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான தொடர்களிலும் நடித்து வந்தார். சின்னத்திரை மூலம் பிரபலமான ஒரு செலிபிரிட்டியாக இருந்த ரச்சிதாவுக்கு கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான ராபர்ட் மாஸ்டர் அவரை சுற்றி சுற்றி வந்தது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அவர்களின் வீடியோக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்டிங்காக இருந்ததது. ஏற்கனவே ஏராளமான ரசிகர்களை பெற்றிருந்த ரச்சிதாவுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எக்கு தப்பாக உயர்ந்தது. பெரிய அளவில் ரீச் பெற்ற ரச்சிதாவுக்கு வெள்ளித்திரையில் ஹீரோயினாக நடிக்க வாய்ப்பும் கிடைத்துள்ளது. 'மெய்நிகரே' என்ற படத்தின் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் ரச்சிதா என கூறப்படுகிறது.
ரச்சிதா திருமண வாழ்க்கை:
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான முன்னணி நடிகையாக இருந்து இப்போது வெள்ளித்திரையில் அடியெடுத்து வைக்கும் அளவிற்கு வளர்ந்துள்ள ரச்சிதாவுக்கு ஏனோ திருமண வாழ்க்கை அத்தனை இனிமையாக அமையவில்லை. தான் நடித்த பிரிவோம் சந்திப்போம் சீரியலில் ரீல் ஜோடியாக இருந்த நடிகர் தினேஷ் அன்பவரியை கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஒரு சில ஆண்டுகள் சந்தோஷமாக அமைந்த அவர்களின் திருமண வாழ்க்கையில் போக போக ஏகப்பட்ட கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு அதனால் மனக்கசப்பு உண்டாகி பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற ரச்சிதாவுக்கு வாழ்த்துக்களை எல்லாம் தெரிவித்து இருந்தார் தினேஷ். அதனால் ரச்சிதா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு மனக்கசப்பு மறந்து இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ்வார்கள் என அவரின் ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் நடந்தது என்னவோ நினைத்ததற்கு நேர்மாறாக இருந்தது. தினேஷ் தன்னை ஆபாசமாக பேசி, மெசேஜ் அனுப்பி வருகிறார், மிரட்டுகிறார் என தினேஷ் மீது ரச்சிதா காவல் நிலையத்தில் சமீபத்தில் புகார் அளித்து இருந்தார். இவர்களுக்கு இடையே இருந்த விரிசல் அதிகமாகி கிட்டத்தட்ட முடிவுக்கு வந்துவிட்டது.
இந்த நிலையில் ரச்சிதாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்ட் ஒன்று அவரின் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது. "என்னை குணப்படுத்தும் பயணத்தில் இருக்கிறேன். எனது தெரப்பிஸ்டை சந்திக்க செல்கிறேன்" என அவர் பயணம் மேற்கொள்ளும் புகைப்படம் ஒன்றையும் "என்னுடைய ஒரே தெரபிஸ்ட்" என கூறி தனது செல்ல பூனைக்குட்டியை கொஞ்சும் வீடியோ ஒன்றையும் போஸ்ட் செய்துள்ளார். அவரின் இந்த போஸ்டை பார்த்த ரசிகர்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருங்கள் என கமெண்ட் மூலம் ஆறுதல் கூறி வருகிறார்கள்.