தமிழ்,தெலுங்கு, மலையாளம் எனப் பல்வேறு தென்னிந்திய மொழித் திரைப்படங்களில் சைலண்ட் பெர்ஃபார்மராக வலம் வந்துகொண்டிருக்கிறார் ராஷி கண்ணா. தற்போது மலையாள சூப்பர் ஹிட்டான பிரம்மம் படத்தில் நடித்துள்ள அவர் அடுத்து இந்தியில் சித்தார்த் மல்ஹோத்ராவுடன் யோதா மற்றும் அஜய் தேவ்கனுடன் ருத்ரா ஆகிய படங்களில் நடிக்க உள்ளார்.
தனது நடிப்பு அனுபவம் குறித்து அண்மையில் பேசியுள்ள அவர்,’இந்திய சினிமா என்பது சமூகத்தின் பிரதிபலிப்பு. ஒவ்வொரு சமூகமும் வெவ்வேறு வகை. அதற்கு ஏற்றபடி நமது நடிப்பையும் மாற்றிக்கொள்ள வேண்டும். அது எளிதான காரியமில்லை. மலையாளம் சினிமாவில் கதை முக்கியம். தெலுங்கு சினிமா கமர்ஷியலானது. அதுவே இந்தி சினிமா இன்னும் தனது அடையாளத்தைத் தேடிக் கொண்டிருக்கிறது. அதனால்தான் தென்னகத்தில் இருந்து நிறைய ரீமேக் படங்கள் இந்தியில் உருவாகி வருகிறது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.