லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் த்ரிஷா நடிக்கும் ராங்கி படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.


தன்னுடைய 20 ஆண்டு கால திரைப் பயணத்தை சமீபத்தில் த்ரிஷா நிறைவு செய்துள்ள நிலையில், தற்போது ஆக்சன் ரோலில் அவர் கலக்கியுள்ள படம் ‘ராங்கி’. பிரபல இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸின் கதை எழுதியுள்ள இந்தப் படத்தை எம்.சரவணன் இயக்கியுள்ளார். 


இப்படம் வரும் டிசம்பர் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தற்போது அறிவித்துள்ளது. ரிலீஸ் தேதியுடன் விறுவிறுப்பான ஆக்சன் காட்சிகளுடன் கூடிய வீடியோ ஒன்றையும் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் பகிர்ந்துள்ளது.


 






இந்த வீடியோ இணையத்தில் லைக்ஸ் அள்ளி வருகிறது. 


பொன்னியின் செல்வன் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களை இந்த ஆண்டு ஈர்த்த த்ரிஷாவின் 20 ஆண்டு கால சினிமா பயணத்தைக் கொண்டாடும் வகையில், காமன் டிபி மாற்றி சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர்.


இந்நிலையில் தன் ரசிகர்களின் அன்பில் திக்குமுக்காடிப்போன த்ரிஷா, தன் ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார்.


”அன்புள்ள த்ரிஷியன்களே... நான் உங்களில் அங்கம் வகிப்ப்பதற்கும், நீங்கள் என்னில் பாதியாக அங்கம் வகிப்பதற்கும் நான் பெருமைப்படுகிறேன்.


 



 


நம்முடைய வருங்கால பயணத்துக்கு வாழ்த்துகள். உங்களது இன்றைய செயல் மற்றும் அன்றாட அனைத்து செயல்களுக்கும் நன்றி” என நெகிழ்ச்சி தெரிவித்திருந்தார்.