பிரபல இயக்குநர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா தி ரைஸ்’. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் கடந்த சில நாட்களுக்கு முன்பு (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தில் சமந்தா முதல் முறையாக ஐடம் சாங் என அழைக்கப்படும் குத்து பாடலுக்கு நடனமாடியிருந்தார். என்னதான் அந்த பாடலுக்கு குறிப்பிட்ட பிரிவினர் இடையே எதிர்ப்பு கிளம்பினாலும் தற்போது பலரும் முனுமுனுக்கும் பாடல்களுள் ஒன்றாக சூப்பர் ஹிட் அடித்துவிட்டது. பாடலின் வரிக்காணொளிகள் மட்டுமே வெளியான நிலையில் , படத்தில் சமந்தாவின் நடனத்தை பார்ப்பதற்காகவே திரையரங்கிற்கு சென்று படத்தை பார்க்கின்றனர் ரசிகர்கள். புஷ்பா படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தியிருக்கும் அல்லு அர்ஜுனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.







இந்த சூழலில் நடிகை சமந்தாவும்  அல்லு அர்ஜூனை தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெகுவாக பாராட்டியுள்ளார். அதில் “  இது அல்லு அர்ஜுனுக்கான பாராட்டு பதிவு..படத்தில் உங்களின் கவர்ந்திழுக்கும் நடிப்பு ...ஒவ்வொரு நொடியும் (நெருப்பு எமோஜி ) ..ஒரு நடிகர் சிறப்பாக நடிக்கும் பொழுது நான் அதிக இன்ஸ்பைராவேன்..புஷ்பா படத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பால் நான் அந்த நிலையை அடைந்தேன்.. அல்லு அர்ஜூன் உங்களின் ஒரு பக்கம் சரிந்த தோள்ப்பட்டை , அந்த உச்சரிப்பு...god damn SWAG ...அச்சச்சோ..உண்மையிலேயே பிரம்மித்தேன்..நிஜமாக ..உண்மையிலேயே இன்ஸ்பைராக இருந்தது” என வெகுவாக பாராட்டியுள்ளார்.






மூக வலைதளங்களில் கலவையான விமர்சனங்கள் வந்தாலும் கூட படம் வசூல் ரீதியாக மெகா ஹிட். இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை Lyca Productions - ஸ்ரீ லட்சுமி மூவிஸ் கைப்பற்றி படத்தை தமிழகமெங்கும் ரிலீஸ் செய்தது. அல்லு அர்ஜுன் சினிமா பயணத்தில் இது வரை 'புஷ்பா' தான் அதிக பொருட்ச்செலவில் எடுக்கப்பட்ட படமாகும். இரண்டு பாகமாக வெளியாகும் இந்த படத்திற்கு மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதிக பொருட்செலவை செய்துள்ளனர். முதல் பாகமான 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் தியேட்டர், சாட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமைகள் அனைத்தும் சேர்த்து ரூ.250 கோடி ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.