Watch Video: இதுதான் மாஸ்.. கெத்துகாட்டிய நியூயார்க் மேயர்... இன்ஸ்டாவில் பகிர்ந்த புஷ்பா பட நடிகை..

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தொடங்கி குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி வரை அல்லு அர்ஜூனின் மேனரிசத்தை செய்து புஷ்பா ட்ரெண்டில் இணைந்தனர்.

Continues below advertisement

2021ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியாகி  பெரும் வெற்றியைத் தழுவிய பான் இந்தியா படம் புஷ்பா.

Continues below advertisement

அல்லு அர்ஜூன், ஃபஹத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா நடிப்பில், சுகுமார் இயக்கத்தில் இப்படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில் படமும் அதன் பாடல்களும் பட்டி தொட்டியெல்லாம் ஹிட் அடித்தன.

குறிப்பாக படத்தில் இடம்பெற்ற அல்லு அர்ஜூனின் மேனரிசம், வசனங்கள் என அனைத்தும் உலக அளவில் ட்ரெண்ட் ஆகின.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தொடங்கி குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி வரை அல்லு அர்ஜூனின் மேனரிசத்தை செய்து மகிழாத பிரபலங்கள் இல்லை. அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் இந்த வீடியோக்களை ட்ரெண்ட் செய்து மகிழ்ந்தனர்.

அந்த வகையில் முன்னதாக நியூ யார்க் மேயர் எரிக் ஆடம்ஸ் புஷ்பா அல்லு அர்ஜூன் மேனரிசத்தை சிரித்தபடி செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் புஷ்பா படத்தில் நடித்தவரும் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினியுமான அனுஷ்யா பரத்வாஜூன் உடன் இருக்கும் நிலையில், வீடியோ அதிக லைக்குகளைப் பெற்று இணையத்தில் ஹிட் அடித்துள்ளது.

 

முன்னதாக புஷ்பா 2 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் ஹைதராபாத்தில் தொடங்கி தற்போது நடைபெற்று வரும் அடுத்த ஆண்டு படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Continues below advertisement