Pushpa 2: சமந்தாவையே தூக்கி சாப்பிடுவாரா ஸ்ரீலீலா? புஷ்பா 2 ஃபீவரில் ரசிகர்கள்!

புஷ்பா 2 படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவதன் மூலம் சமந்தாவின் புகழை ஸ்ரீலீலா மிஞ்சுவாரா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Continues below advertisement

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அல்லு அர்ஜூன். இவரது நடிப்பில் உருவாகி 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. தெலுங்கு மட்டுமின்றி தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

புஷ்பா 2:

Continues below advertisement

புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதற்கு அந்த படத்தில் இடம்பெற்ற ம்ம் சொல்றியா.. என்ற பாடல் மிக முக்கிய காரணமாக அமைந்தது. அந்த பாடலும், அந்த பாடலுக்கு சமந்தா ஆடிய நடனமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

புஷ்பா படம் முடியும்போது இரண்டாவது பாகத்திற்கான தொடக்கத்துடன் முடிந்திருக்கும். இதையடுத்து, புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வந்தது. பல கட்ட சிக்கல்களுக்கு பிறகு புஷ்பா படம் வரும் டிசம்பர் 5ம் தேதி வெளியாகிறது.

சமந்தாவிற்கு பதில் ஸ்ரீலீலா:

புஷ்பா படத்தில் சமந்தா ஒரு பாடலுக்கு நடனம் ஆடியது போல புஷ்பா 2ம் பாகத்தில் வளர்ந்து வரும் பிரபல நடிகை ஸ்ரீலீலா நடனம் ஆடுகிறார். இதை படக்குழு நேற்று அதிகாரப்பூர்வ அறிவித்துள்ளது. இதனால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.

தன்னுடைய நடனத் திறமை மூலமாகவே ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான நடிகையாக புகழ்பெற்றவர் ஸ்ரீலீலா. 2019ம் ஆண்டு கிஸ் என்ற கன்னட படம் மூலமாக நாயகியாக அறிமுகமானவர் பின்னர், புனித் ராஜ்குமார், ரவிதேஜா, ராம் பொத்தேனி, நிதின் படங்களில் நடித்து பிரபலமானார். பின்னர், பாலய்யா, மகேஷ்பாபு ஆகியோருடன் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்துள்ளார்.

சமந்தாவை மிஞ்சுவாரா ஸ்ரீலீலா:

புஷ்பா படத்தில் ஒரு பாடலுக்கு மட்டுமே நடனம் ஆடினாலும் சமந்தா இந்திய அளவில் புகழ்பெற்றார். தற்போது அதேபோல ஒரு வாய்ப்பு ஸ்ரீலீலாவிற்கு கிடைத்துள்ளது. ஸ்ரீலீலா சிறந்த நடனக் கலைஞர் என்பதால் அவரும் சமந்தா அளவிற்கு இந்திய அளவில் பிரபலம் அடைய வாய்ப்பு உள்ளது. ம்ம்ம் சொல்றியா பாடலைப் போல ஸ்ரீலீலா ஆடும் பாடலும் மிகப்பெரிய வரவேற்பு பெற்றால் நிச்சயமாக இந்திய அளவில் மிகப்பெரிய புகழ் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

புஷ்பா படத்தின் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தாலும் ஒரு பாடலுக்கு மட்டுமே ஆடிய சமந்தாவிற்கே ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கியுள்ள இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக பகத் ஃபாசில் நடித்துள்ளார். மிரோஸ்லா குபா ப்ரோசெக் என்ற போலந்து நாட்டைச் சேர்ந்த ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

Continues below advertisement
Sponsored Links by Taboola