பொன்னியின் செல்வன் 2-வின் ரிலீஸ் தேதி
நேற்றைய தினத்தில், இன்று மாலை 4 மணிக்கு பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் குறித்த முக்கிய தகவல் வெளிவரும் என லைகா நிறுவனம் அவர்களின் சமூக வலைதளபக்கத்தில் வெளியிட்டு இருந்தனர். இன்று வரப்போகும் தகவல், இரண்டாம் பாகத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் குறித்தும் இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.
மற்றொரு பக்கம், நேர்காணல் ஒன்றில் உதயநிதி, “ பொன்னியின் செல்வன் அடுத்தாண்டில் வரும் ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லியிருந்தார். இதனால், ரெட் ஜெயண்ட் மூவிஸ் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் விநியோகத்தை வாங்கியிருக்கலாம் என்ற பேச்சும் சினிமா வட்டாரத்தில் சுழன்று கொண்டு இருந்தது. தற்போது, ஆர்வமாக இருந்த ரசிகர்களின் குழப்பத்தை போக்கும் வகையில், பொன்னியின் செல்வன் படம் வருகிற ஏப்ரல் 28 ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை அதிகாரபூர்வமாக லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
வைரலான செல்வராகவனின் ட்வீட்
துணை என்பது கானல் நீர் என இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட் சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஏற்கனவே கடந்த 2006 ஆம் ஆண்டு நடிகை சோனியா அகர்வாலை திருமணம் செய்து கொண்ட செல்வராகவன், அவரை 2010-ஆம் ஆண்டு விவாகரத்து செய்தார். தொடர்ந்து தன்னிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த கீதாஞ்சலியை 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு 3 குழந்தைகள் உள்ளனர்; துணை என்பது கானல் நீர் என இயக்குநர் செல்வராகவன் போட்ட ட்வீட் சமூக வலைத்தளத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.
தளபதி 67-ல் இணையும் கெளதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலி கான்
இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், விக்னேஷ் சிவன் மற்றும் கெளதம் வாசுதேவ் மேனன் ஆகிய மூன்று பேரும் சமீபத்தில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்டனர். அதில், கெளதம் வாசுதேவ் மேனனிடம் “லோகேஷ் கனகராஜ் படத்தில் நீங்கள் நடித்துள்ளீர்களா?” என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ஒரு முறை லோகேஷ் கனகராஜை பார்த்தார். லோகேஷ் கனகராஜ், “சொல்லுங்க சார்..” என்றவுடன், “அமா..அவரு படத்துல நடிச்சிருக்கேன்” என தளபதி 67 படம் குறித்த புதிய தகவலை வெளியிட்டுள்ளார், ஜி வி எம்.
தமிழ் திரையுலகில், வில்லனாக நடித்து பிரபலமான நடிகர் மன்சூர் அலிகான்; இவரும் தளபதி 67 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. சமிபத்தில் நடைப்பெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட மன்சூர் அலிகான், ஆரம்பத்தில் விஜய்யுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளதாகவும், சமீப காலமாக எந்த படத்திலும் விஜய்யுடன் இணைந்து நடிக்க முடியாமல் போனது என கூறினார். மேலும், தற்போது விஜய்யுடன் மீண்டும் இணைந்து நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார். விஜய்யின் படத்தை இயக்கிவரும் லோகேஷ் கனகராஜ், மன்சூர் அலிகானின் மிகப்பெரிய ரசிகர் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்த நடிகை கங்கனா
சில நாட்களுக்கு முன்னர் பாலிவுட் சீரியல் நடிகை துனிஷா ஷர்மா படப்பிடிப்பு தளத்திலேயே தற்கொலை செய்து கொண்டார். அவரது மரணம் தொடர்பாக கங்கனா ரணாவத் கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய கங்கனா “நம் நாட்டு பெண்களை பாதுகாப்பது அரசின் கடமை. சீதைக்காக ராமன் நின்றது போல, திரெளபதிக்காக கிருஷ்னன் நின்றதைப்போல, பிரதமர் நரேந்திர மோடியும் பெண்களுக்கு எதிரான குற்றச்செயல்களில் ஈடுபடுவோர்களுக்கு உடனடியாக மரண தண்டனை வழங்கும் வகையில், வலுவான சட்டதிட்டங்களை உருவாக்க வேண்டும்” என்று இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவிட்டு மோடியை டேக் செய்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.
8000 கோடி வசூலை தாண்டிய அவதார் 2
கடந்த டிசம்பர் 16ஆம் தேதி ஹாலிவுட்டின் பிரமாண்ட இயக்குநர் ஜேம்ஸ் கேமரூனின் கனவுப்படமான அவதார் படத்தின் இரண்டாம் பாகம் ’தி வே ஆஃப் வாட்டர்’ உலகம் முழுதுமுள்ள திரையரங்குகளில் வெளியானது
தொடக்கத்தில் சுமாராகவே தொடங்கிய அவதார் படத்தின் வசூல் மெல்ல மெல்ல அதிகரித்து சென்ற வார மத்தியில் சூடுபிடித்தது. இந்நிலையில் அவதார் ’தி வே ஆஃப் வாட்டர்’ உலகம் முழுவதும் ஒரு கோடி பில்லியன் அதாவது 8200 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.