மிகுந்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 30 ஆம் தேதி வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது 400 கோடி வசூலை தாண்டியுள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. 


முதல் மூன்று வாரங்களுக்குள்ளாகவே 400 கோடி பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷன்!


பிரபல இயக்குனர் மணிரத்னமின் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் பொன்னியின் செல்வன். இப்படம் வெளியாவதற்கு முன்பாகவே, முன்பதிவில் கிட்டத்தட்ட 17 கோடி வரை டிக்கெட் விற்பனை செய்யப்பட்டது. உலகம் முழுதும் வெளியான இத்திரைப்படத்தை, சினிமா ரசிகர்கள் மட்டுமன்றி அனைத்து தரப்பு மக்களும் திருவிழா போல கொண்டாடினர். இந்த ஆண்டு அனைத்து தமிழ் படங்களிலும் வசூலை முறியடித்து சாதனை படத்துள்ளது. நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் முன்பதிவில் 15 கோடி வசூலித்ததே இந்தாண்டின் சாதனையாக இருந்தது. அதனை பொன்னியின் செல்வன் முறியடித்துவிட்டது. 




பொன்னியின் செல்வன் படம், வெளியான ஒரே வாரத்தில் 100 கோடி வசூலைத் தாண்டி சாதனைப் படைத்தது. இதையடுத்து, படத்தின் வசூல் குறித்த தரவுகளை லைகா நிறுவனம் வெளியிட்டு வந்தது. அதன்படி, திரைப்படம் வெளியான அன்றைய தினம் 80 கோடி வசூல் செய்ததாகவும், தமிழகத்தில் மிக விரைவாக 100 கோடியை எட்டிய படமாக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.


 






மக்களின் ஆதரவாலும், நல்ல விமர்சனங்களாலும் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிநடைப் போட்டு வரும் பொன்னியன் செல்வன் திரைப்படம் தற்போது உலகளவில் 400 கோடி வசூல் சாதனையை கடந்துள்ளதாக லைகா நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


பொன்னியின் செல்வன் 2:


கல்கியின் நாவலைத் தழுவி இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ள பொன்னயின் செல்வன் திரைப்படத்தின் படப்பிடிப்பு 150 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில், முன்னனி நடிகர்-நடிகைகளான த்ரிஷா, ஜெயம் ரவி, விக்ரம, ஐஸ்வர்யா ராய், விக்ரம், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளதால், பொன்னியின் செல்வனின் படப்பிடிப்பை விரைந்து முடித்துவிட்டதாக படக்குழுவின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 


பொன்னியின் செல்வனின் இரண்டாம் பாகத்தில் முதல் பாகத்தை விட ஸ்வாரஸ்யமான கதையம்சம் இருக்கும் என்பதால், மக்கள் இப்படத்தின் அடுத்த பாகத்திற்காக ஆவலுடன்  காத்துக் கொண்டுள்ளனர்.