STR 49: சிம்பு - வெற்றிமாறன் கூட்டணி, மிரட்டலான போஸ்டருன் டைட்டிலை அறிவித்த தயாரிப்பாளர் தாணு
STR 49: சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு “அரசன்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

STR 49: சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் புதிய படத்திற்கு “அரசன்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
STR 49 - அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் நடிகர் சிலம்பரன் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தின் தலைப்பை படக்குழு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தயாரிப்பாளர் தானு வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “ஆளப்பிறந்த அரசன் வெற்றியுடன் சிலம்பரசன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், கையில் கத்தியை ஏந்தியபடி நிற்கும் தனுஷின் புகைப்படம் அடங்கும் போஸ்டரில், படத்தின் தலைப்பு “அரசன்” என்பதையும் உறுதி செய்துள்ளார். இதன் மூலம், சிம்பு - வெற்றிமாறன் முதல்முறையாக இணையும் படத்தின் பணிகள் வேகமடைந்துள்ளதை உணர முடிகிறது.
ஆளப்பிறந்த அரசன்
— Kalaippuli S Thanu (@theVcreations) October 7, 2025
வெற்றியுடன் சிலம்பரசன்#VetriMaaran @SilambarasanTR_#STR49 #SilambarasanTR #VCreations47 #ARASAN pic.twitter.com/zLk8chzGJl
ப்ரோமோ வெளியீடு எப்போது?
தனுஷ் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த வடசென்னை திரைப்படத்தின் கதையோடு இணைந்ததாக, சிம்பு மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படம் தயாராகி வருகிறது. இதற்கான ப்ரோமோ ஷுட்டிங்கை கூட சில மாதங்களுக்கு முன்பு படக்குழு எடுத்தது. இதுதொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலாகி கவனத்தை ஈர்த்தன. ஆனாலும், தற்போது வரை அந்த ப்ரோமோ வீடியோ வெளியாகவில்லை. இந்நிலையில், அதிகாரப்பூர்வ டைட்டில் வெளியாகியுள்ளதால், விரைவில் அந்த வீடியோவும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றன.
அசுரன் போல வெற்றி கிடைக்குமா?
கலைப்பு எஸ். தாணு தயாரிப்பில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான அசுரன் திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. அதே தோரணையில் அரசன் படத்தில் டைட்டிலும் இணைந்துள்ளதகாவும் , நிச்சயம் இந்த படமும் சிம்புவிற்கு மிக முக்கிய படமாக இருக்கும் என்றும் ரசிகர்கள் கூறதொடங்கியுள்ளனர். அதேநேரம், அசுரன் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்து இருந்த நிலையில், அரசன் படத்திற்கும் அவரே இசையமைப்பாரா? என்ற கேல்வி எழுந்துள்ளது. காரணம் வெளியாகியுள்ள போஸ்டரில் தயாரிப்பாளர், நாயகன் மற்றும் இயக்குனரின் பெயரை தவிர, வேறு யாரின் விவரங்களும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தாணுவிற்கு டபுள் தமாக்கா
முன்னதாக சூர்யா மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் உருவாக இருந்த வாடிவாசல் படத்தை தான் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருந்தார். அதற்கான ஆரம்பகட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால், நீண்ட இழுபறிக்குப் பிறகு அந்த படம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதன் பிறகே சூர்யா மற்றும் வெற்றிமாறனின் கால்ஷீட்களை பயன்படுத்தி தனித்தனியே இரண்டு படங்களை தயாரிக்க முடிவு செய்தார். அதன்படி, முதல்படமாக சிம்பு - வெற்றிமாறன் கூட்டணியில் அரசன் உருவாகி வருகிறது. சூர்யாவை வைத்து எடுக்கவுள்ள படம் தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















