Priyanaka latest post: ‛வெல்கம் ஹோம் இஹா கண்ணா...’ ப்ரியங்காவின் ப்ரியமான க்யூட் போஸ்ட்!
Priyanka Deshpande: தம்பியின் குழந்தையை வீட்டிற்கு வரவேற்கும் பிரியங்கா "வெல்கம் ஹோம் கண்ணா" என்று தலைப்பிட்டு குழந்தை வீட்டுக்கு வந்துட்டா இனி எனக்கு என்ன வேணும் என பதிவிட்டுள்ளார்.

Priyanka Deshpande: அத்தை மடி மெத்தையடி... தம்பி மகளுடன் பாடும் விஜய் டிவி பிரியங்கா
விஜய் டிவியின் செல்லா குட்டி பிரியங்கா தேஷ்பாண்டே. பிரியங்காவின் அழகு, பேச்சு திறன், வெகுளித்தனம் என இது பிடிக்கும் அது பிடிக்கும் என பிரித்து பார்க்கவே தேவி இல்லை. பிரியங்கா என்றாலே அனைவருக்கும் பிடிக்கும் எனும் அளவிற்கு உலகளவில் பிரபலம் இந்த மேடம்.
Just In




ஃபேவரட் தொகுப்பாளினி :
சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், ரஜோ வூட்ல பார்ட்டி என பல நிகழ்ச்சிகளின் தொகுப்பாளினி பிரியங்கா என்றாலும் அவரின் பப்ளிசிட்டி வேற லெவலுக்கு சென்றது பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி மூலம் தான். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரன்னர் அப் வெற்றியாளர் ஆனார். பிரியங்காவிற்காகவே அவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகளை பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருப்பார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

குடும்பம் தான் எனக்கு எல்லாமே:
பிரியங்கா தனது குடும்பத்தில் மீது மிகுந்த பாசம் கொண்டவர். அவரின் குடும்பம் அவரின் உலகம் என பல முறை அவரே பல நிகழ்ச்சிகளில் கூறியுள்ளார். பிரியங்காவின் தம்பிக்கு சமீபத்தில் தான் பெண் குழந்தை பிறந்தது. குழந்தையுடன் போட்டோ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்தார் பிரியங்கா.
பிரியங்காவின் ஓணம் வாழ்த்து :
ஓணம் பண்டிகையான இன்று பிரியங்கா தனது இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அனைவருக்கும் ஓணம் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். தம்பியின் குழந்தையை வீட்டிற்கு வரவேற்கும் பிரியங்கா "வெல்கம் ஹோம் கண்ணா" என்று தலைப்பிட்டு குழந்தை வீட்டுக்கு வந்துட்டா இனி எனக்கு என்ன வேணும் என பதிவிட்டுள்ளார் பிரியங்கா. மேலும் தனது தம்பியின் குழந்தைக்கு இஹா என பெயரிட்டுள்ளனர் பிரியங்கா குடும்பத்தினர். அதை வெளிக்காட்டும் விதமாக பிரியங்கா, அவரின் தாய் மற்றும் தம்பி மூவரும் குழந்தையின் பெயரின் எழுத்துக்களை கொண்ட டி ஷர்ட் அணிந்துள்ளனர். இந்த போஸ்ட் தற்போது லைக்ஸ்களை குவித்து வருகிறது.