நடிகை பிரியங்கா சோப்ரா  கென்யாவிற்கு சென்று வறட்சியை பார்வையிட்ட வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார்.



நடிகை பிரியங்கா சோப்ரா யுனிசெஃப் நல்லெண்ணத் தூதராக உள்ளார். இவர் யுனிசெஃப்  அமைப்புடன்  தற்போது வறட்சியின் பிடியில் சிக்கி தவிக்கும் கென்யாவிற்கு சென்று அங்குள்ள மக்களின் நிலை குறித்து நேரில் கேட்டறிந்துள்ளார். கென்யாவில் பல வருடங்களாகவே பசி, வறட்சி என வாட்டி வதைக்கிறது. மழைக்காலங்கள் தவிர மற்ற நாட்களில் நிலத்தடி நீரும் இல்லாமல் , மக்கள் திண்டாடி வருகின்றனர். இவர்களுக்கு அவசர உதவி தேவைப்படுகிறது என்பதுதான் நடிகை பிரியங்கா சோப்ராவின் வேண்டுகோளாக இருக்கிறது.


 






பிரியங்கா சோப்ரா பதிவிட்டுள்ள வீடியோவில் அவர் அங்குள்ள மக்கள் மற்றும் குழந்தைகளின் நிலை குறித்து கேட்டறிவதும், கென்யாவில் தற்போதைய நிலை என்ன என்பது குறித்தும் காட்டப்படுகிறது. வீடியோவில் பிரியங்கா சோப்ரா “இன்று நான் மிகவும் கவலையாக இருக்கிறேன். என் மனம் ஒரே நேரத்தில் ஒரு மில்லியன் இடங்களில் உள்ளது. நான் உண்மையில் விளிம்பில் உணர்கிறேன்” என ஆரமிக்கிறார். கிட்டத்தட்ட 1 மில்லியனுக்கும் அதிகமான குழந்தைகள் அவசர உதவி கோரும் நிலையில் உள்ளார்கள் என கூறும் பிரியங்கா சோப்ரா “ குந்தைகள் பட்டினியால் இறக்கின்றனர், மில்லியன் கணக்கானவர்கள் பட்டினியின் விளிம்பில் உள்ளனர். இது காலநிலை நெருக்கடியின் முகம், அதனை உணர்ந்து நாம் செயல்பட வேண்டும் . இதுதான் இப்போதைய கென்யாவின் நிலை. ஆனால், நம்பிக்கை இருக்கிறது மற்றும் தீர்வுகள் உள்ளன. அடுத்த சில நாட்களில் யூனிசெஃபுடன் இணைந்து இந்த பகுதிக்கு தேவையான உதவிகளை செய்யவுள்ளேன். நல்ல வேலை தொடர்வதை உறுதிசெய்ய பணம் மிகவும் தேவைப்படுகிறது. எனவே “தயவுசெய்து எனது பயோவில் உள்ள இணைப்பைக் கிளிக் செய்து நன்கொடை அளிக்கவும்.” என தனது ரசிகர்களிடம் கோரிக்கை வைத்துள்ளார்.