தனது வேலையின் காரணமாக இந்த ஆண்டு முழுவதையும் லண்டனில் கழித்துள்ளார் பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா. சமீபத்தில் நேர்காணல் ஒன்றில், தனது கணவர் நிக் ஜோனஸிடம் இருந்து தூரமாக இருப்பது மிகுந்த கடினமான ஒன்றாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா தம்பதியினருக்கு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரத்தில் சொந்தமாக வீடு இருக்கிறது. மேலும், லண்டனில் பிரியங்கா சோப்ராவுக்குத் தனியாக வீடு இருக்கிறது. இதே நேர்காணலில், பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் லாஸ் ஏஞ்செல்ஸில் இருந்து லண்டனுக்கு, தன்னுடன் ஒரு நாளைக் கழிப்பதற்காகவோ, வெறும் டின்னர் உண்பதற்காகவோ மட்டும் வருவதையும் கூறியுள்ளார். 


தங்கள் தொழில் வாழ்க்கைகளையும், அதற்குள் இருவருக்குமான நேரத்தை மேலாண்மை செய்வதையும் குறித்து பேசிய பிரியங்கா சோப்ரா, `நாங்கள் எப்போதும் பேசிக் கொண்டே இருப்போம். ஒருவர் மனதில் இருப்பதை மற்றொருவர் தெரிந்துகொள்ளும் விதமாக எங்கள் உறவு இருக்கிறது. பிற வேலைகளை விட நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் அதிக முக்கியத்துவம் அளிப்போம். எங்கள் இருவருக்கும் தனித்தனியான தொழில்முறை வாழ்க்கை இருக்கிறது. அதனால் நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மற்றவரின் தொழில் வாழ்க்கையில் தலையிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார். 



தொடர்ந்து பேசிய பிரியங்கா சோப்ரா, `நாங்கள் எப்போதும் இணையாக இருக்கிறோம். ஒருவரின் மீது மற்றொருவருக்கு எப்போதும் எங்களுக்குள் கருத்து இருக்கிறது. நாங்கள் இருவரும் எங்கள் தொழில் வாழ்க்கையைப் பல ஆண்டுகள் உழைத்துக் கட்டியிருப்பதால், எங்கள் இருவருமே எங்களை வெற்றியாளர்களாகக் கருதிக் கொள்கிறோம். அதே நேரத்தில், நம்முடன் இருப்பவரின் மனதில் இருப்பதையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அதனை நம்முடைய முக்கியத்துவமாகக் கருத வேண்டும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


தன் கணவர் நிக் ஜோனஸ் தனக்காக செய்த மிகப்பெரிய செயல்களைப் பற்றி பேசியுள்ள பிரியங்கா சோப்ரா, `எனது கணவர் இந்த விவகாரத்தில் சிறப்பாக செயல்படுபவர். இந்த ஆண்டு முழுவதும் நான் லண்டனில் இருந்ததால் இது மிகுந்த கடினமான ஒன்றாகக் கழிந்தது. அதனால் நிக் ஜோனஸ் தன் பணிகள் அனைத்தையும் கைவிட்டு விட்டு, நாள் முழுவதும் என்னுடன் கழிக்க லண்டனுக்குப் பறந்து வந்துவிடுவார். என்னுடன் டின்னர் மட்டும் சாப்பிட்டு விட்டு, திரும்பிப் பறந்து சென்றதும் உண்டு. நாம் ஒருவருக்கு ஒருவர் அதிக முக்கியத்துவம் அளித்தால், அனைத்தும் சிறப்பாக நடக்கும்’ என்று கூறியுள்ளர். 



கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட நிக் ஜோனஸ் - பிரியங்கா சோப்ரா ஜோடி, சமீபத்தில் லண்டனில் நடந்த பிரிட்டிஷ் ஃபேஷன் விருதுகள் விழாவில் கலந்துகொண்டு, சிவப்புக் கம்பளத்தில் நடந்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.