மகேஷ் பாபு நடிக்கும் மாபெரும் சாகச படத்தை எஸ்.எஸ் ராஜமெளலி இயக்கியுள்ளார். இப்படத்தில் பிருத்விராஜ் , பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பான் இந்திய நட்சத்திரங்கள் நடித்துள்ளார்கள். எம்.எம் கீரவாணி படத்திற்கு இசையமைத்துள்ளார் . வரும் நவம்பர் 15 ஆம் தேதி இப்படத்தின் பிரம்மாண்டமான ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் டீசர் உலகளவில் வெளியாக இருக்கிறது. க்ளோப் ட்ராட்டர் என்று இந்த படத்திற்கு தற்போது தற்காலிக  டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.  அதே நேரத்தில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி வருகின்றன

Continues below advertisement


ஆர்.ஆர்.ஆர் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் ராஜமெளலி இயக்கி வரும் பிரம்மாண்ட சாகச கதை க்ளோப் ட்ராட்டர். இப்படத்தின் பட்ஜெட் மட்டுமே 1000 கோடி என கூறப்படுகிறது. இந்தியாவில் ஒரிஸா , ஹைதராபாத் ஆகிய மாநிலங்களிலும் கென்யா நாட்டில் பெரும்பாலான படப்பிடிப்பும் நடைபெற்று வருகிறது. 


கும்பாவாக பிருத்விராஜ் 


முன்னதாக இப்படத்தில் நடிகர் பிருத்விராஜின் கதாபாத்திர அறிமுக போஸ்டர் வெளியானது.  கும்பா என்கிற கதாபாத்திரத்தில் இப்படத்தில் அவர் நடித்துள்ளார். இதன் போஸ்டரில் பிருத்விராஜின் தோற்றம் யாரும் எதிர்பார்க்காத விதமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் சிறப்பு பாடல் ஒன்றும் ஸ்ருதி ஹாசன் குரலில் வெளியாகி ரசிகர்களிடம் கவனமீர்த்தது. 


மந்தாகினியாக பிரியங்கா சோப்ரா 


தற்போது இப்படத்தில் பிரியங்கா சோப்ராவின் கதாபாத்திரம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மந்தாகினி என்கிற கதாபாத்திரத்தில் புடவையில் கையில் துப்பாக்கியுடன் பிரியங்கா சோப்ரா ஆக்‌ஷன் அவதாரம் எடுத்துள்ளார். இப்படத்தில் நடிப்பதற்காக பிரியங்கா சோப்ரா 30 கோடி சம்பளம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.