தற்போது அதிகமாக டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுவதே இதற்கு காரணம்.  பொதுவாக தொலைக்காட்சிகளில் ஒவ்வொரு சீரியல்களுக்கும் கிடைக்கும்  டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் அந்த தொலைக்காட்சி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு கொண்டு சேர்ந்துள்ளது என்பதை கணிக்க முடியும். 


ஆரம்பத்தில் ஐந்து நாட்கள் மட்டுமே சீரியல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்தது.  ரசிகர்கள் சின்னத்திரை தொடர்களுக்கு கொடுக்கும் வரவேற்பை பார்த்து எல்லாம் தொலைக்காட்சிகளிலுமே ஆறு நாட்களுக்கு அதாவது சனிக்கிழமையிலும் சீரியல்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. சீரியல்களுக்கு மக்கள் அளித்து வரும் ஆதரவு தான் இதற்கு காரணம். 


ரியாலிட்டி ஷோக்களில் அதிகமாக கவனம் செலுத்தி வந்த டிவி சேனல்கள்  கூட தற்போது சீரியல்களை ஒளிபரப்பு செய்து  வருகின்றன. இந்நிலையில் சன் தொலைக்காட்சி இரண்டு சீரியல்களை வாரத்தில் 7 நாட்களும் ஒளிபரப்பு செய்ய முடிவெடுத்துள்ளனர்.  பல்வேறு தொலைக்காட்சிகள் சீரியல்களை ஒளிபரப்பு செய்து வந்தாலும், சீரியல்களுக்கு பெயர் பெற்ற  இந்த சேனல் ரேட்டிங்க் வரிசையில் முதல் 5 இடங்களை பிடிக்கின்றன. அதிலும் கயல், எதிர்நீச்சல் உள்ளிட்ட சீரியல்கள் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் 3 இடங்களில் வந்து விடும். அதிரடி காட்சிகளுடன்  ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலுக்கு ஒரு ரசிகர் பட்டாளமே உண்டு. அதிலுல் இதில்  ஆதி குணசேகரனாக நடித்து வரும் மாரிமுத்துகாகவே இந்த தொடரை பார்ப்பவர்கள் ஏராளம். அதோடு மட்டுமல்லாமல் நாளுக்கு நாள் இந்த தொடரின் சுவாரஸ்யம் கூடிக் கொண்டே போகிறது.


இந்நிலையில் இந்த சீரியலை வாரத்தில் 7 நாட்களும் ஒளிபரப்ப இந்த  தொலைக்காட்சி முடிவு செய்து இருக்கிறது. சில தொலைக்காட்சிகளில் ஞாயிற்று கிழமைகளில் ரியாலிட்டி ஷோக்கள் அதிகமாக ஒளிபரப்பாகும் நிலையில், தற்போது  இந்த தொலைக்காட்சி ஞாயிற்றுக் கிழமையிலும் எதிர்நீச்சல் சீரியலை ஒளிபரப்ப முடிவு செய்துள்ளது. மேலும் இந்த தொலைக்காட்சி  அன்பே வா சீரியலையும் இனி வாரத்தில் 7 நாட்களும் ஒளிபரப்பு செய்ய முடிவு செய்துள்ளது. 


பொதுவாகவே வீட்டில் இருக்கும் பெண்கள் பெரியவர்கள் சீரியல் பார்க்க அதிக ஆர்வம் காட்டும் நிலையில் இளைய தலைமுறையினர் மியூசிக், ஸ்போர்ட்ஸ் சேனல் உள்ளிட்டவற்றை பார்க்கவே விரும்புகின்றனர். இந்நிலையில் , ஞாயிற்றுக்கிழமையில் சீரியல் ஒளிபரப்பு செய்யப்படுவதால் எந்த சேனலை பார்ப்பது என வீட்டில் உள்ளவர்களுக்கு இடையே கடும் போட்டி நிலவ வாய்ப்புள்ளது என சோஷியல் மீடியாக்களில் நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.