‛கொண்டாடுவதா அழுவதா எனத் தெரியவில்லை...’ பிருத்விராஜ் மனைவி சுப்ரியா உருக்கமான பதிவு!
Prithiviraj Wife: பிருத்விராஜ் மனைவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான சுப்ரியா மேனன் நேற்று தனது பிறந்தநாளை கணவரோடு சேர்ந்து லண்டனில் நடைபெற்ற லேடி காகாவின் லைவ் ஷோவில் கலந்து கொண்டு சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

Birthday Note: "மிஸ் யு டாடி..." உணச்சிவசப்பட்டு சுப்ரியா மேனன் எழுதிய இன்ஸ்டா குறிப்பு
மாலிவுட் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என் பன்முகம் கொண்டவர் நடிகர் பிருத்விராஜ். மலையாள திரைப்படங்களில் முக்கியத்துவம் காட்டினாலும் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். மொழி திரைப்படத்தில் நடிகை ஜோதிகாவின் ஜோடியாக மிக சிறப்பாக நடித்திருந்தார்.
Just In




பிருத்விராஜ் மனைவி பிறந்தநாள் கொண்டாட்டம் :
பிருத்விராஜ் மனைவி மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான சுப்ரியா மேனன் நேற்று தனது பிறந்தநாளை கணவரோடு சேர்ந்து லண்டனில் நடைபெற்ற லேடி காகாவின் லைவ் ஷோவில் கலந்து கொண்டு சிறப்பான நாளை கொண்டாடியுள்ளார். அவரின் பிறந்தநாளுக்கு சமூக ஊடகம் மூலம் வாழ்த்து தெரிவித்த அனைவர்க்கும் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டார். மேலும் அவரது தந்தையின் மறைவை குறித்து உணர்ச்சிகரமான ஒரு குறிப்பையும் அவரோடு எடுத்து கொண்ட புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

தந்தையின் பிரிவு :
சுப்ரியா மேனனின் தந்தை விஜய் குமார் மேனன் 2021ம் ஆண்டு நவம்பர் மாதம் 14ம் தேதியன்று புற்றுநோயால் ஒரு வருட காலமாக போராடிய வந்த நிலையில் காலமானார். சுப்ரியா அதனது தந்தையின் பிரிவை எண்ணி பல முறை தனது குறிப்பை பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல் தன்னுடைய பிறந்த நாளான நேற்று தனது குறிப்பையும், திருமணத்திற்கு முன்தினம் இரவு நடைபெற்ற மெஹந்தி விழாவில் தந்தையுடன் நடனமாடும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
தந்தையோடு நடனம் :
மேலும் அவர் கூறுகையில் ஒவ்வொரு ஆண்டும் எங்கள் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டம் மிகவும் சிறப்பாக இருக்கும். புதிய ஆடைகள், பரிசுகள், கேக், பிறந்தநாள் பார்ட்டி என அந்த நாளே களைகட்டும். நான் கொண்டாடுவதற்காகவும் என்னை ஸ்பெஷலாக உணரவைப்பதற்காகவும் என் தந்தை ஒவ்வொரு ஆண்டும் என்னை மகிழ்விப்பர். ஆனால் அப்படி உணவரவைக்க எனது இன்று அவர் இல்லை. அவரின் இழப்பை என்னால் சமாளிக்க முடியவில்லை. இந்த நாளை கொண்டாடுவதா அல்லது அழுவதை என்று கூட எனக்கு புரியவில்லை என்று தனது வருத்தத்தை தெவித்தார் சுப்ரியா. திருமணத்திற்கு முன்தினம் மெஹந்தி விழாவின் போது எனது தோழிகளால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் என்று அவருடை நம்மோடு பகிர்ந்துள்ளார். திருமண வேலைகளில் மிகவும் பிஸியாக இருந்த எனது தந்தை என்னுடைய சந்தோஷத்திற்காக என்னுடன் சேர்ந்து நடனம் ஆடினார். அந்த நினைவுகளை இந்த புகைப்படங்கள் மீண்டும் கொண்டுவருகின்றன என்று பதிவிட்டுள்ளார்.