Prince vs Sardar LIVE : ‛வெடிக்கப் போவது யார்?’ சர்தார்... ப்ரின்ஸ் படங்களின் அடுத்தடுத்த லைவ் அப்டேட்!
Prince vs Sardar LIVE Updates: தீபாவளி பண்டிகையையொட்டி இந்த ஆண்டு, ப்ரின்ஸ் மற்றும் சர்தார் படம் இன்று வெளியாகியது. இப்படங்கள் தொடர்பான லைவ் அப்டேட்களை காணலாம்.
ABP NADU Last Updated: 21 Oct 2022 10:49 AM
Background
தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு கொண்டாட்டங்களோடு அந்த தினத்தில் ரிலீசாகும் புதுப்படங்களை குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்தால் தான் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். இதனால் ஒவ்வொரு பண்டிகை வரும் போது...More
தமிழகம் முழுவதும் வரும் அக்டோபர் 24 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி பண்டிகை என்றாலே புத்தாடை, பட்டாசு கொண்டாட்டங்களோடு அந்த தினத்தில் ரிலீசாகும் புதுப்படங்களை குடும்பத்துடன் தியேட்டரில் பார்த்தால் தான் ஒரு மகிழ்ச்சி கிடைக்கும். இதனால் ஒவ்வொரு பண்டிகை வரும் போது கூடவே என்னென்ன படங்கள் ரிலீசாகப் போகிறது என்ற எதிர்பார்ப்பு சாமானிய மக்களுக்கும் இருக்கும். அந்த வகையில் வரும் தீபாவளிக்கு இரண்டு புதிய படங்கள் ரிலீசாகவுள்ளது. முதலாவது சிவகார்த்திகேயன் நடித்த “ ப்ரின்ஸ்”. தெலுங்கு திரைப்படமான ‘ஜாதி ரத்னாலு’ படத்தின் இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை மரியா, நடிகர் சத்யராஜ் மற்றும் பலர் நடித்து வருகின்றனர். தமன் இசையமைத்துள்ள ப்ரின்ஸ் படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் உள்ளிட்டவை பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், சிவகார்த்திகேயனின் முதல் தீபாவளி ரீலிஸ் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல் மற்றொரு படமாக கார்த்தி நடிப்பில் “சர்தார்” வெளியாகிறது. பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் ஹீரோயினாக ராஷி கண்ணா நடிக்க லைலா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சர்தார் படத்தின் தமிழக திரையரங்க உரிமையை ரெட் ஜெயிண்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் ட்ரெய்லர் அண்மையில் வெளியாகி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இவ்விரு படங்களும் தீபாவளியை முன்னிட்டு நாளை (அக்டோபர் 21) ஆம் தேதி வெளியாகிறது. இதற்கிடையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை ஒன்று விடுக்கப்பட்டிருந்தது. அதில் “தீபாவளி திரைப்படங்களுக்கு சிறப்பு காட்சி திரையிட அனுமதி வழங்க வேண்டும்” என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 21 முதல் 27 ஆம் தேதி வரை சிறப்பு காட்சிகளை திரையிடலாம் எனவும், திரையிடப்படும் காட்சிகள் எண்ணிக்கை குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Prince vs Sardar LIVE : சர்தார் மற்றும் ப்ரின்ஸ் படக்குழுவிற்கு வாழ்த்துக்கள் - வெங்கட் பிரபு
இயக்குநர் வெங்கட் பிரபு தனது வாழ்த்துக்களை சர்தார் மற்றும் ப்ரின்ஸ் ஆகிய இரு படக்குழுவினருக்கும் தெரிவித்துள்ளார்.