கோமாளி இயக்குனர் பிரதீப் ரங்கநாதனின் இயக்கத்தில் “லவ் டுடே” படம் வெளியாகி மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படத்தின் இயக்குனரே ஹீரோவாக களம் இறங்கியுள்ளார். விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் தூள் கிளப்பி வரும் 'லவ் டுடே' படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர். தமிழ் நாட்டில் மட்டும் 2 கோடியும் உலகளவில் 50 கோடியும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது லவ் டுடே திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்த இப்படத்துக்கு இசையமைத்துள்ளார் யுவன் சங்கர் ராஜா. 


 



 


'அப்பா  லாக்' ஷார்ட் பிலிம் :


கதாநாயகியாக இவானா நடிக்க இவர்களுடன் சத்யராஜ், ராதிகா சரத்குமார், யோகி பாபு, சூப்பர் சிங்கர் ஆஜித் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இது 2017ம் ஆண்டு வெளியான பிரதீப் ரங்கநாதனின் 'அப்பா  லாக்' ஷார்ட் பிலிமை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம். 'அப்பா லாக்' ஷார்ட் பிலிமும்  நல்ல வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


 




 


பிரேம்ஜி ட்வீட் :


ஆரம்ப காலத்தில் ஷார்ட் பிலிம் மூலம் தனது திரை வாழ்க்கையை தொடங்கிய பிரதீப் ரங்கநாதன் பலரிடமும் வாய்ப்புகள் தேடி அழைத்துள்ளார். பல திரை பிரபலங்களிடம் தனக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். அந்த வகையில் நடிகர் பிரேம்ஜியிடம் தன்னுடைய ஷார்ட் பிலிம் யூடியூப் விடியோவை பகிர்ந்து அதற்கு ஆதரவு அளிக்குமாறும் பிடித்திருந்தால் லைக் செய்யுமாறும்  கேட்டுக்கொண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். இந்த ட்வீட் பிரேம்ஜிக்கு அனுப்பப்பட்டது 2014ம் ஆண்டு. அதை தற்போது தனது ட்விட்டர் பக்கம் மூலம் பகிர்ந்து சார் உங்களுடைய அடுத்த படத்தில் எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் என பிரதீப் ரங்கநாதனுக்கு ட்வீட் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார் நடிகர் பிரேம்ஜி.  பழைய டீவீட்டை ஷேர் செய்து பிரேம்ஜி போஸ்ட் செய்துள்ள இந்த ட்வீட்  தற்போது லைக்ஸ்களை குவித்தும் பகிரப்பட்டும் வருகிறது. 


 



 



இந்த போஸ்ட் வேடிக்கையாக இருந்தாலும் உலக நாயகன் ஸ்டைலில் 'மாற்றம் ஒன்றே மாறாதது' என்ற டயலாக் தான் நினைவுக்கு வருகிறது. பிரதீப் ரங்கநாதன் தனது கடுமையான உழைப்பால் இன்று வெற்றி பெற்றுள்ளார். அன்று வாய்ப்பு தேடியவர் இன்று வாய்ப்பு கொடுக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளார்.