பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசன் 11 ஆவது நாளை எட்டியுள்ளது. நிகழ்வின் தொடக்கத்தில் 20 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில் இரண்டு பேர் இதுவரை வெளியேறி தற்போது 18 போட்டியாளர்கள் இடையே அன்றாடம் புதுப்புது சர்ச்சைகள் உருவாகி வருகின்றன. மறுபக்கம் பிக்பாஸ் வீட்டில் இருந்து முதல் வாரம் வெளியேறிய பிரவீன் காந்தி நிகழ்ச்சி குறித்து தொகுப்பாளர் விஜய் சேதுபதி குறித்தும் எதிர்மறையான கருத்துக்களை யூடியுப் சேனல்களில் பேசி வருகிறார்
விஜய் சேதுபதி போட்டியாளர்களை பேசவிடவில்லை
ரட்ச்சகன் , ஜோடி ஸ்டார் ஆகிய ஹிட் படங்களை இயக்கிய பிரவீன் காந்தி இந்த ஆண்டு பிக்பாஸ் தமிழின் 9 ஆவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றார். மற்ற போட்டியாளர்களைப் போல் இல்லாமல் சர்ச்சைகளில் ஒதுங்கியே இருந்தாலும் முதல் வாரமே அவரை பலர் எவிக்ஷனுக்கு நாமினேட் செய்ததால் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். தற்போது பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுவந்த அனுபவம் பற்றி யூடியுப் சேனலின் பேசி வருகிறார். அப்போது நிகழ்ச்சித் தொகுப்பாளரான விஜய் சேதுபதியை அவர் விமர்சித்து பேசினார்.
" விஜய் சேதுபதி எனக்கு சினிமாவில் ஜூனியர் ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் அவர் எனக்கு சீனியர். இதனால் நான் அவரை எதிர்த்து பேசுவதா வேண்டாமா என்கிற குழப்பத்தில் இருந்தேன். திரு விஜய் சேதுபதி அவர்களே போட்டியாளர்களை கொஞ்சம் பேச விடுங்கள். நீங்கள் யாரை பேச விடுவதில்லை. நீங்கள் ரொம்ப பிஸியான சூழலில் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறீர்கள். அதனால் மற்ற போட்டியாளர்களை பேசவிடுங்கள். நீங்களும் நானும் நல்ல நண்பர்கள். என்னை மட்டுமில்லை விஜய் சேதுபதி எல்லா போட்டியாளர்களையும் தனது ஆளுமைக்குள் கொண்டு வரப்பார்க்கிறார். நான் சொல்வதை தான் நீங்க கேட்கனும். கிட்டதட்ட அவரேதான் பிக்பாஸ் என்கிற அளவிற்கு அவரது நடவடிக்கைகள் இருக்கின்றன" என பிரவீன் காந்தி கூறியுள்ளார்.