பொங்கல் பண்டிகையையொட்டி இந்தியாவில் வெளியாகிய படங்களில் அதிக வசூலை ஈட்டி சாதனைப் படைத்துள்ளது அனுமன் படம்


அனுமன்


இயக்குநர் பிரஷாந்த் வர்மா இயக்கத்தில் தெலுங்கு நடிகர் தேஜா சஜ்ஜா நடித்துள்ள படம் அனுமன். பிரஷாந்த் வர்மா சினிமேட்டிக் யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகி இருக்கும் அனுமன் படம் கடந்த ஜனவர் 12-ஆம் தேதி வெளியாகி யாரும் எதிர்பார்க்காத வகையில் மிகப்பெரிய வெற்றிபெற்றுள்ளது.  வினய் ராய், அம்ரிதா ஐயர், வரலஷ்மி சரத்குமார் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். தமிழ் , தெலுங்கு. இந்தி , கன்னடம் , மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிய இப்படம் ஆரம்பம் முதலே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.


ராமர் கோயிலுக்கு நன்கொடை


அனுமன் படம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெறும் நிலையில் அயோத்தியில் கட்டப்பட்டிருக்கும் ராமர் கோயிலுக்கு ஒடு டிக்கெட்டிற்கு ஐந்து ரூபாய் வீதம் நன்கொடை அளிப்பதாக படக்குழு முன்னதாக அறிவித்திருந்தது. இதன்படி  கடந்த ஜனவரி 22 ஆம் தேதி அனுமன் படத்திற்கு 55, 28,211 டிக்கெட்கள் விற்பனை ஆகியிருந்த நிலையில்  ஒரு டிக்கெட்டிற்கு 5 ரூபாய் வீதம் 55, 28,211 டிக்கெட்களுக்கான பணத்தை ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கியது அனுமன் படக்குழு. 


300 கோடி வசூல்


பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ் , தெலுங்கு, இந்தி மொழியில் பல படங்கள் வெளியாகின. இதில் எந்த படம் வெற்றிபெறும் என்கிற கேள்வி ரசிகர்களிடம் இருந்து வந்தது. பெரும்பாலான படங்கள் இன்னும் சில நாட்களில் ஓடிடி தளத்தில் வெளியாகும் தேதிகள் வெளியாகிவிட்டன. ஆனால் அனுமன் படம் இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை 25 நாட்களை திரையரங்கில் கடந்துள்ள இப்படம் உலகளவில் 300 கோடி வசுலித்துள்ளதாக படக்குழு தகவல் வெளியிட்டுள்ளது.






கடந்த ஆண்டு பிரபாஸ் நடித்து மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ஆதிபுருஷ் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் போனது. தற்போது மிக குறைவான பட்ஜெட்டில் எடுக்கப் பட்ட இந்தப் படம் இவ்வளவு பெரிய வசூலை ஈட்டியுள்ளது ஒரு  எடுத்துக்காட்டாக ரசிகர்களால் முன்வைக்கப் படுகிறது. மேலும் இந்த படத்தின் ஒவ்வொரு டிக்கெட்டிலும் இருந்து ரூ.5 ராமர் கோயிலுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


பிரஷாந்த் சினிமேட்டிக் யுனிவர்ஸ்


தமிழில் லோகேஷ் கனகராஜ் எல்.சி.யு  உருவாக்கியிருபபது போல் பாலிவுட்டில் பிரஷாந்த் சினிமேட்டிக் யுனிவர்ஸ் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டுள்ளார். அதன் படி  இந்தத் தொடரில் முதல் படமான அனுமன் வெளியாகி மிகப்பெரிய வெற்றியும் பெற்றுள்ளது. இந்த வரிசையில் அடுத்ததாக அதீரா என்கிற படம் இந்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது.