பிரணிதா சுபாஷ் :


தமிழ் , தெலுங்கு , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை பிரணிதா சுபாஷ் .தமிழில் மாசு, சகுனி உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார்.இவர் கடந்த ஆண்டு மே மாதம் தொழிலதிபர் நிதின் என்பவரை திருமணம் செய்துக்கொண்டார். அதன் பின்னர் திரைப்படங்களில் எதுவும் நடிக்கவில்லை. இந்த தம்பதிகளுக்கு  சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பிரணிதா அவ்வபோது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வருகிறார்.  அந்த வகையில் சோமசா  அல்லது சோமசி என அழைக்கக்கூடிய இனிப்பு பலகாரம் செய்யும் வீடியோவை பகிர்ந்திருக்கிறார். 







சோமசா செய்யும் பிரணிதா :


வீடியோவில் பிரணிதா ஸ்டன்னர் பச்சை மற்றும் வெள்ளை நிற லக்னோவி சல்வார் உடையில் இருக்கிறார். ஒரு பெண் சமைக்கும் பொழுது கூட இவ்வளவு அழகாக இருக்க முடியுமா என ரசிகர்கள் அந்த வீடியோவிற்கு கீழே கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் தலைக்காட்டாத பிரணிதா தற்போது குடும்பத்தினருடன் அதிகம் நேரம் செலவிடுகிறார். என்னதான் நடிகையாக இருந்தாலும் பாரம்பரியம் மாறாமல் அவர் பின்பற்றும் சில சடங்குகள் மற்றும் வாழ்க்கை முறை பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. 







சர்ச்சைக்குள்ளான புகைப்படம் :


முன்னதாக பிரணிதா ஜூலை 28 அன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் “ பீமனா அம்மாவாசை “ என்ற தலைப்பில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.. பீமனா அமாவாசை என்பது   பெண்கள் தங்கள் கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ள பிற ஆண்கள்  நீண்ட  ஆயுளுடன் இருக்க வேண்டும் என பிராத்தனை செய்யும் ஒரு சடங்கு என கூறப்படுகிறது . இந்த சடங்கு சமயத்தில் பெண்கள் ஆண்களின் அதாவது கணவனின் பாததிற்கு பூஜை செய்வார்களாம். அப்படியான புகைப்படத்தைதான் பிரணிதா பகிர்ந்திருந்தார். அதில் கணவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். அவரது பாதங்கள் தாம்பூழத்தில் வைக்கப்பட்டு , பூக்கள் தூவப்பட்டு இருக்கிறது. கீழே பிரணிதா அமர்ந்திருக்கிறார். இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள் . இதுதான் பெண் அடிமைத்தனம் , இதனை ஊக்குவிக்கலாமா என சரமாரியாக கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர். இதற்கு பதிலளித்த பிரணிதா, “ இந்த சடங்கு நான் சிறு வயதில் இருந்தே நம்பும் ஒன்று . அதனை நான் பின்பற்றக்கூடாதா ? , எனது புகைப்படத்திற்கு வந்த கமெண்ட்ஸ்களில் 90 சதவிகிதம் ஆதரவாகத்தான் வந்தது , மீதமுள்ள 10 சதவிகித நெகட்டிவ் கமெண்டுகளை நான் கண்டுகொள்ள விரும்பவில்லை என்றார்.