தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷ் ஒரு நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என பன்முக  திறமையாளராக விளங்குகிறார். 2017ம் ஆண்டு வெளியான 'பவர் பாண்டி' திரைப்படம் மூலம் இயக்குநராக அடியெடுத்து வைத்த தனுஷ் அடுத்ததாக தன்னுடைய 50வது படம் மூலம் மீண்டும் இயக்குநராகி உள்ளார். 


 



ராயன்:


சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் தனுஷ் இயக்கி நடித்துள்ள இப்படத்திற்கு 'ராயன்' என தலைப்பிடப்பட்டுள்ளது. எஸ்.ஜே சூர்யா, காளிதாஸ் ஜெயராம், செல்வராகவன், நித்யா மேனன், துஷாரா விஜயன், சந்தீப் கிஷன், அபர்ணா முரளி, வரலட்சுமி சரத்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். வட சென்னையின் கேங்ஸ்டர் கதைக்களத்தை மையமாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 26ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அந்த வகையில் இப்படத்தில் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மூன்று பாடல்கள் ஏற்கனவே வெளியாகி மக்களின் கவனத்தை ஈர்த்தது. 


 



துள்ளிகிட்டு இருக்கியா?



இந்த இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் பிரகாஷ்ராஜ், தனுஷின் அசுர வளர்ச்சி குறித்து மேடையில் பேசுகையில் "நான் தனுஷை பார்த்து ஒரு டயலாக் கூறி இருக்கிறேன் ' 10 கிலோ சதை, 15 கிலோ எலும்பை வெச்சு கிட்டு துள்ளிக்கிட்டு இருக்கியா நீ' அப்படினு பேசி இருப்பேன். 'இன்னும் துள்ளிக்கிட்டு தான் இருக்காரு...' தனுஷை பார்த்து எனக்கு பெருமையாக இருக்கிறது. அசுர வளர்ச்சி... அழகான வளர்ச்சி... இப்போது இயக்குநராகவும்" என பாராட்டி இருந்தார் நடிகர் பிரகாஷ்ராஜ்.2006ம் ஆண்டு வெளியான 'திருவிளையாடல் ஆரம்பம்' படத்தில் நடிகர் பிரகாஷ்ராஜ் மற்றும் தனுஷ் இருவருக்கும் இடையில் நடைபெறும் வாங்குவதில் இந்த வசனம் இடம் பெற்று இருக்கும்.