நாஸ்வே செஸ் 2026 போட்டியில் பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவை தமிழக முதல்வர் விஜய் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். முதல்வர் விஜயுடன் செஸ் விளையாடிய அனுபவத்தை கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா பத்திரிகையாளர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டுள்ளார்
நார்வே செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய செஸ் வீரர் பிரக்ஞானந்தா பட்டம் வென்ற முதல் இந்தியராக சாதனை படைத்துள்ளார். செஸ் சாம்பியன்ஷிப் வெறு இந்தியா திரும்பிய கையோடு தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜயை அவர் சந்தித்துள்ளார். இது குறித்து தமிழ அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் " மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.6.2026) தலைமைச் செயலகத்தில், நார்வே தலைநகர் ஆஸ்லோவில் நடைபெற்ற நார்வே செஸ் 2026 தொடரில் முதல் இந்தியராகப் பட்டத்தை வென்று, வரலாற்றுச் சாதனை படைத்த கிராண்ட்மாஸ்டர் ஆர். பிரக்ஞானந்தாவிற்கு உயரிய ஊக்கத் தொகையாக 50 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை வழங்கி, கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்களுடன் செஸ் விளையாடினார்கள்." என கூறப்பட்டுள்ளது
முதல்வருடன் செஸ் ஆடிய அனுபவம்
முதலமைச்சர் செஸ் விளையாடிய அனுபவம் பற்றி பத்திரிகையாளர்களை சந்தித்த பிரக்ஞானந்தா பகிர்ந்துகொண்டுள்ளார். " ஒரு சதுரங்கப் பலகையைக் கொண்டு வரச் சொன்னார்கள், நான் முதலமைச்சருடன் ஒரு ஆட்டம் விளையாடினேன். அவர் என்னுடன் சதுரங்கம் விளையாடுவார் என்று நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சுமார் 15 நிமிடங்கள் விளையாடினோம், அந்த ஆட்டத்தில் நான் வெற்றி பெற்றேன். அவர் மிகவும் ஆதரவாகவும் ஊக்கமளிப்பவராகவும் இருந்தார்.
