விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்..கே படத்தை அவர் இயக்கியுள்ளார். ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸுடியோஸ் இணைந்து இப்படத்தை  தயாரித்துள்ளது. க்ரித்தி ஷெட்டி , கெளரி கிஷன் , எஸ்.ஜே சூர்யா , சீமான் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இது நிச்சயம் ப்ளாக்பஸ்டர் என்று சொல்லும் அளவிற்கு இந்தடிரெய்லர் இளம் ரசிகர்களை கவர்ந்துள்ளது

Continues below advertisement

லவ் இன்சூரன்ஸ் கம்பேனி டிரெய்லர்

ஜென் ஜீ ஸ்டார் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில்   கடந்த ஆண்டு  வெளியான டிராகன் , டியூட் ஆகிய இரு படங்களும் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றன. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள படம் லவ் இன்சூரன்ஸ் கம்பேனி.  எஸ்.ஜே சூர்யா , கரித்தி ஷெட்டி , சீமான் , கெளரி கிஷன் மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிரூத் இசையமைத்துள்ளார். எல்.ஐ.கே படத்தின் பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களிடம் பெரியளவில் வரவேற்பைப் பெற்றுள்ளன. தற்போது வெளியாகியுள்ள டிரெய்லரை பார்த்தபின்னர் இந்த படம் நிச்சயம் 100 கோடி  வசூலிக்கும்  என ரசிகர்கள் கூறி வருகிறார்கள் .

 

Continues below advertisement

சர்ச்சைக்குரிய வசனங்கள் 

திரையாக்கம் ரீதியாக இப்படத்தை அனைவரும் பாராட்டினாலும் இந்த டிரெய்லரில் பிரதீப் ரங்கநாதன் பேசும் வசனமும் சர்ச்சைக்குள்ளாக வாய்ப்புள்ளது."இதுவரைக்கும் பிரேக் அப் பண்ண  சாதி , அப்பா அம்மாவ காரணம் சொல்லிட்டு இருந்தீங்க இப்ப என்ன ஆப் ஒத்துக்கலனு சொல்றீங்க.' ஆவேசமாக பிரதீப் பேசும் வசனம் பெரியளவில் விவாதப்பொருளாகும் என எதிர்பார்க்கலாம்