நீட் வினாத்தாள் கசிவை கண்டித்து டெல்லியில் போராடிய மாணவர்கள் காவல்படையினரால் தாக்கப்பட்டது இந்தியா முழுவதும் பெரும் கண்டன அலையை எழுப்பி வருகிறது. தமிழ்நாட்டிலும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி சென்னை , மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளார்கள். இது குறித்து , தமிழ் திரையுலகினர் பெரும்பாலும் மெளமே காட்டி வந்தனர்.
இந்த நிலையில் கோலிவுட் சினிமாவில் இருந்து முதல் நபராக பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் பக்கத்தில் டவீட் செய்துள்ளார். போராடிய மாணவர்களை காவல் அதிகாரிகள் தாக்கியதை கண்டிக்கும் விதமாக " கேள்வி கேட்டால் லத்தியால் பதில் சொல்லாதீர்கள்" என்று பதிவிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் இந்த போராட்டத்தில் மத்திய அரசை விமர்சித்து ஒரு வார்த்தைக்கூட சொல்லாத நிலையில் வளர்ந்து வரும் பிரதீப் ரங்கநாதன் தனது கருத்தை துணிச்சலாக வெளிப்படுத்தியதற்காக அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
