கடந்த 2021 ஆம் ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் காத்திரமான படைப்பாக வெளியான ரைட்டர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பிராங்லின் ஜேகப். தற்போது தனது இரண்டாவது படத்தை பிரதீப் ரங்கநாதனை வைத்து இயக்கவிருக்கிறார். பிரதீப் ரங்கநாதன் இதுவரை நடித்த படங்களைவிட இப்படம் மாறுபட்டதாக இருக்கும் என கூறப்படுகிறது .
தமிழ் சினிமாவில் ஒரு இயக்குநர் நடிகர் என ஒரு சில படங்களில் உச்சத்திற்கு சென்றவர் பிரதீப் ரங்கநாதன். கடந்த ஆண்டு டிராகன் , டியூட் என அடுத்தடுத்து இவர் நடித்த 100 கோடி வசூல் ஈட்டின. அதே ஆண்டில் வெளியாக இருந்த எல்.ஐ.கே படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டதால் ஹாட்ரிக் மிஸ் ஆனது. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள எல்.ஐ.கே திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தபடியாக சைன்ஸ் ஃபிக்ஷன் படத்தை இயக்கி நடிக்க இருப்பதாக தகவல் வெளியான நிலையில் தற்போது இளம் இயக்குநர் பிராங்லின் ஜேகப் இயக்கத்தில் பி.ஆர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது
பிராங்லின் ஜேகப் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன்
கடந்த 2021 ஆம் ஆண்டு சமுத்திரகனி நடிப்பில் காத்திரமான படைப்பாக வெளியான ரைட்டர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார் பிராங்லின் ஜேகப். முதல் படமே விமர்சன ரீதியாக பெரியளவில் பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது அடுத்தபடியாக பிரதீப் ரங்கநாதனை அவர் இயக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கிட்டதட்ட 70 கதைகளை பிரதீப் மற்றும் அவரது குழு கேட்டபின் இந்த கதையை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பிரதீப் இதுவரை நடித்த படங்களை விட இந்த படத்தின் கதை மாறுபட்டதாக இருக்கும் என்றும் முழுக்க முழுக்க ஓரிரவில் நடக்கும் த்ரில்லர் படமாக இந்த படம் உருவாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. கமர்சியல் படங்களில் மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட இயக்குநர்களோடு இணைந்து பணியாற்றி வரும் பிரதீப் ரங்கநாதனுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன
