கோமாளி , லவ் டுடே ஆகிய படங்களைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் தனது அடுத்த படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார். இப்படத்தில் விஜயின் தி கோட் பட நடிகையும் சிவகார்த்திகேயனின் பராசக்தி பட நடிகையும் நாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
கோமாளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் பிரதீப் ரங்கநாதன். தொடர்ந்து தனது இரண்டாவது படமான லவ் டுடே படத்தை இயக்கி அதில் நாயகனாகவும் அறிமுகமானார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வசூல் செய்தது. கடந்த ஆண்டு வெளியான டிராகன் மற்றும் டியூட் ஆகிய இரு படங்களும் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றன. தமிழ் தெலுங்கு சினிமாவில் இளம் நடிகர்களில் பெரும் ரசிகர் பட்டாளத்தை கொண்டவராக வலம் வருகிறார் பிரதீப் ரங்கநாதன். வரும் பிப்ரவரி மாதம் விக்னேஷ் சிவன் இயக்கியுள்ள எல்.ஐ.கே படத்திற்கு ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கிறார்கள். இந்நிலையில் பிரதீப் ரங்கநாதன் அடுத்தபடியாக இயக்கி நடிக்க இருக்கும் படத்தைப் பற்றிய அப்டேட் வெளியாகியுள்ளது
பிரதீப் ரங்கநாதன் பட நடிகைகள்
அடுத்தபடியாக பிரதீப் ரங்கநாதன் சைன்ஸ் ஃபிக்ஷன் திரைப்படம் ஒன்றை இயக்க இருக்கிறார். லவ் டுடே , டிராகன் படங்களை தயாரித்த ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க இருக்கிறது. இப்படத்தில் மீனாக்ஷி செளதரி மற்றும் ஶ்ரீலீலா ஆகிய இருவரும் நாயகிகளாக நடிக்க இருக்கிறார்கள். விஜயின் தி கோட் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார் மீனாக்ஷி செளதரி . தற்போது சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் நாயகியாக அறிமுகமாகியுள்ளார் ஶ்ரீலீலா. இரு நடிகைகளையும் ஒரே படத்தில் ரொமான்ஸ் செய்ய இருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
எல்.ஐ.கே
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் இன்சூரன்ஸ் கம்பேனி திரைப்படம் வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் , கெளரி கிஷன் , க்ரித்தி ஷெட்டி , எஸ்.ஜே சூர்யா , சீமான் ஆகியோர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரின் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது.