பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே திரைப்படத்தின் ரிலீஸ் பல்வேறு காரணங்களுக்காக தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 3 ஆம் தேதி இப்படம் வெளியாகும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாக இருந்த பரதின் காளிதாஸ் 2 , லெஜண்ட் சரவணனின் லீடர் ஆகிய படங்கள் ஏப்ரல் 10 க்கு ஒத்திவைக்கப்பட்டன. ஆனால் தற்போது எல்.ஐ.கே படத்தின்  ரிலீஸ் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் அதிருப்திக்கு உள்ளாகியுள்ளார்கள்.

Continues below advertisement

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக 2022 ஆம் ஆண்டு காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் வெளியானது. இதனைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் எல்.ஐ.கே படத்தை அவர் இயக்கியுள்ளார். இப்படத்தை நயன்தாராவின் ரவுடி பிக்ச்சர்ஸ் மற்றும் 7 ஸ்கிரீன் ஸுடியோஸ் இணைந்து தயாரித்துள்ளது. க்ரித்தி ஷெட்டி , கெளரி கிஷன் , எஸ்.ஜே சூர்யா , சீமான் ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக இருந்து பல்வேறு காரணங்களால் இப்படம் தொடர்ச்சியாக ஒத்திவைக்கப்பட்டு வருகிறது

காத்திருப்பில் பிரதீப் ரங்கநாதன் ரசிகர்கள்

இளம் தலைமுறையினர் கொண்டாடும் நடிகராக பிரதீப் ரங்கநாதன் திகழ்ந்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடிப்பில் வெளியான டிராகன் , டியூட் ஆகிய இரு படங்களும் ப்ளாக்பஸ்டர் வெற்றிபெற்றன. அடுத்தபடியாக எல்.ஐ.கே திரைப்படத்தை ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். ஏற்கனவே எல்.ஐ.கே படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. சைன்ஸ் ஃபிக்‌ஷன் ரொமாண்டிக் காமெடி படமாக இந்த படம் உருவாகியுள்ளது. தொடர்ந்து படத்தின் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு வருவது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement

புதிய ரிலீஸ் தேதி

எல்.ஐ.கே படம் தற்போது சில பொருளாதாரா நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. முன்னதாக காதலர் தினத்திற்கு இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுகுறித்து படக்குழு எந்த அறிவிப்பு வெளியிடவில்லை. வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த வாரம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அதிலும் சில புதிய சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இந்தியா தவிர்த்து இப்படம் வெளிநாடுகளிலும் வெளியாக உள்ளது. ஆனால் மலேசியா ரிலீஸிற்கு இப்படம் இன்னும் தணிக்கை செய்யப்படவில்லை. மலேசியாவில் ரமலான் கொண்டாட்டத்திற்காக தணிக்கை வாரியம் வரும் 30 ஆம் தேதி வரை விடுமுறை அளித்துள்ளது. இதனால் படத்தை தணிக்கை செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இது தவிர்த்து சில நிதி சிக்கல்களும் தீர்க்கப்பட இருக்கின்றன. இந்த பிரச்சனைகள் முடிந்தபின்னர் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி சூர்யாவின் கருப்பு படத்துடன் எல்.ஐ.கே  படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

எல்.ஐ.கே படம் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாக இருந்ததால் அன்று வெளியாக இருந்த காளிதாஸ் 2 மற்றும் லீடர் ஆகிய படங்களின் ரிலீஸ் ஏப்ரல் 10க்கு ஒத்திவைக்கப்பட்டன. இதனால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் இடையே பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.