Pradeep Ranganathan : லோக்கலான காலேஜ் பாயாக பிரதீப் ரங்கநாதன்...கவனமீர்க்கும் டிராகன் பட போஸ்டர்
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது

பிரதீப் ரங்கநாதன்
கோமாளி , லவ் டுடே என அடுத்தடுத்த இரு மிகப்பெரிய ஹிட் படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் எல்.ஐ.கே படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்புடன் பிரதீப் ரங்கநாதன் நடித்து வரும் மற்றொரு படம் டிராகன். ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இப்படத்தை இயக்குகிறார். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தயாரிக்கிறது . கடந்த மே மாதம் இப்படத்தின் டைட்டில் வெளியிடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது. தற்போது இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
டிராகன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்
டிராகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாலை 10 மணிக்கு வெளியாகியது. காலேஜ் படிக்கும் மாணவனாக பிரதீப் ரங்கநாதன் இப்படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் கவனமீர்த்து வருகிறது. வழக்கமான காலேஜ் கதையாக இல்லாமல் ஃபேண்டஸி கதையாக இப்படம் இருக்க வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அடுத்து மாலை 6 மணிக்கு மற்றொரு போஸ்டர் வெளியாக இருக்கிறது . விரைவில் இப்படத்தின் டீசர் வெளியாகும் என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Just In




எல்.ஐ.கே
போடா போடி , நானும் ரவுடிதான் , காத்துவாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை இயக்கிய விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே சைன்ஸ் ஃபிக்ஷன் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியுள்ளது. க்ரித்தி ஷெட்டி இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மிஸ்கின் , எஸ்.ஜே.சூர்யா , யோகி பாபு , ஆனந்தராஜ், சீமான் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்ச்சர்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. இன்றைய தலைமுறையினரின் காதலையும் அதில் இருக்கும் பிரச்சனைகளையும் பிரதிபலிக்கும் விதமாக இப்படம் உருவாகி இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
மேலும் படிக்க : Coolie : கூலி படத்தில் பாலிவுட் நடிகர் ஆமீர் கான்...ரஜினி ரசிகர்களுக்கு செம அப்டேட்