பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம்

லவ் டுடே , டிராகன் என நடிகராக அடுத்தடுத்து இரு ப்ளாக்பஸ்டர் படங்களை கொடுத்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். அடுத்தபடியாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குநர் கீர்த்திவாசன் இந்த படத்தை இயக்குகிறார். பிரேமலு பட புகழ் மமிதா பைஜூ இந்த படத்தில் நாயகியாக நடிக்கிறார்

பிரதீப் ரங்கநாதன் பட டைட்டில் 

தற்போது இந்த படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகியுள்ளது. முந்தைய இரு படங்களைப் போலவே செம ட்ரெட்ண்டிங்கான டைட்டிலோடு வந்துள்ளார் பிரதீப். இந்த படத்திற்கு ஆங்கில வார்த்தையான dude 'டூட் ' என பெயர் வைக்கப்பட்டுள்ளது

தீபாவளி ரிலீஸ்

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டூட் திரைப்படம் வரும் தீபாவளிக்கு வெளியாக இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. இந்த ஆண்டு தீபாவளிக்கு மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடித்துள்ள பைசன் , கார்த்தி நடித்துள்ள சர்தார் 2 ,மற்றும் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில்  சூர்யா நடித்துள்ள  சூர்யா 45 ஆகிய படங்கள் போட்டியிட இருக்கின்றன அந்த வகையில் பிரபல ஸ்டார்களுடன் போட்டியிட பிரதீப் ரங்கநாதனின்  டூட் திரைப்படமும் வெளியாக இருக்கிறது