அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் மமிதா பைஜூ நடித்துள்ள படம் டியூட். மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார். லவ் டுடே , டிராகன் என நாயகனாக அடுத்தடுத்த இரு வெற்றிப்படங்களைக் கொடுத்த பிரதீப் ரங்கநாதன் ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தாரா. இந்த தீபாவளிக்கு வெளியாகும் பைசன் படத்தை வென்றதா டியூட் என்பதை இந்த விமர்சன தொகுப்பில் பார்க்கலாம்

Continues below advertisement

டியூட் திரைப்பட விமர்சனம் 

"டியூட், ஒரு சுமாரான காதல் கதை, முதல் பாதியில் ஓரளவுக்கு ஈடுபாட்டை ஏற்படுத்தினாலும் இரண்டாம் பாதி மந்தமாக செல்கிறது . படம் வழக்கமான காதல் கதையின் அனைத்து அம்சங்களையும் கொண்டிருக்கிறது.  முதல் பாதி சற்று மெதுவாகத் தொடங்குகிறது, ஆனால் இடைவேளைக்கு முந்தைய கட்டத்தில் கொஞ்சம் பிக் அப் எடுத்து நல்ல இடைவேளை ப்ளாக்குடன் முடிகிறது.  இருப்பினும், இரண்டாம் பாதி, நம்பிக்கைக்குரிய தொடக்கமாக இருந்தாலும், பின் படுத்தே விடுகிறது. கதையில் நிறைய சாத்தியங்கள் இருந்தாலும் இயக்குனர் கீர்த்தீஸ்வரன் படத்தை , திரைக்கதையில், குறிப்பாக பிற்பாதியில் தடுமாறுகிறார். பிரதீப் மற்றும் மமிதா எதிர்பார்த்தபடி சிறப்பாக நடிக்கிறார்கள், அதே நேரத்தில் சாய் அபிநாயகர் ஒரு அற்புதமான அறிமுகத்தை செய்கிறார் மற்றும் தேவைப்படும்போது காட்சிகளை உயர்த்துகிறார். எடிட்டிங் சில நேரங்களில் திடீரென்று தெரிகிறது, குறிப்பாக இரண்டாம் பாதியில் மிகவும் இறுக்கமாக இருந்திருக்கலாம். சில தருணங்கள் வேலை செய்கின்றன, ஆனால் படத்தில் வலுவான உணர்ச்சி இணைப்பு இல்லை, மேலும் நகைச்சுவை எப்போதாவது மட்டுமே வருகிறது. ஒட்டுமொத்தமாக, ஒரு சுமாரான அனுபவம் டியூட் " என பிரபல விமர்சகர் ஒருவர் கூறியுள்ளார்

Continues below advertisement