டூட் படத்தின் ஓடிடி ரிலீஸ்
லவ் டுடே , டிராகன் என நாயகனாக நடித்து அடுத்தடுத்து இரு ப்ளாக்பஸ்டர் வெற்றிகளை கொடுத்தார் பிரதீப் ரங்கநாதன். தற்போது அறிமுக இயக்குநர் கீர்த்திவாசன் இயக்கத்தில் டூட் படத்தில் நடித்து வருகிறார். மமிதா பைஜூ இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரித்து வருகிறது. டூட் இந்த ஆண்டு தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இப்படியான நிலையில் படத்தின் ரிலீஸ் உரிமம் பெரும் தொகைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் டூட் படத்தின் ஓடிடி ரிலீஸ் உரிமத்தை ரூ 25 கோடிக்கு பெற்றுள்ளது. பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ் டுடே மற்றும் டிராகன் ஆகிய இரு படங்களும் 100 கோடி வசூலீட்டிய நிலையில் தற்போது ரிலீஸூக்கு முன்பே பெரும் தொகைக்கு டூட் திரைப்படம் விற்பனையாகி படத் தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபகரமான படமாக அமைந்துள்ளது. வெறும் மூன்றே படங்களில் தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு சவால்விடும் வகையில் பிரதீப் ரங்கநாதனின் மார்கெட் வளர்ந்துள்ளது.