திரையரங்கில் வெற்றிகரமாக ஓடியப்பின் தற்போது ஓடிடியிலும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது டியூட் திரைப்படம். இப்படத்தின் மூலம் படத்தின் இயக்குநர் பரவலாக கவனமீர்த்துள்ளார். சமூக வலைதளத்தில் அவரை சிலர் விமர்சித்தும் சிலர் பாராட்டியும் பேசி வருகிறார்கள். அந்த வகையில் டியூட் படத்தைப் பார்த்த ரசிகர் ஒருவர் படத்தின் இயக்குநருக்கு இன்ஸ்டாகிராமில் மெசேஜ் செய்து அவரது கருத்தை விமர்சித்துள்ளார். அந்த ரசிகருக்கு இயக்குநர் கீர்த்திஸ்வரன் கொடுத்த பதில் தற்போது இஸ்டாகிராமில் வைரலாகி வருகிறது 

Continues below advertisement

டியூட் படத்தில் சர்ச்சைக்குரிய வசனம் 

அறிமுக இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் , மமிதா பைஜூ , சரத்குமார் ஆகியோர் நடித்து கடந்த அக்டோபர் 17 ஆம் தேதி வெளியான படம் டியூட். ரசிகர்களிடம் சிறப்பான வரவேற்பைப் பெற்ற டியூட்  6 நாட்களில் 100 கோடி வசூலித்தது. இது பிரதீப் ரங்கநாதனுக்கு தொடர்ச்சியாக மூன்றாவது வெற்றிப்படமாக அமைந்தது. வசூல் ரீதியாக படம் வெற்றிபெற்றாலும் டியூட் படத்தின் கதையும் அதில் இடம்பெற்ற சில காட்சிகளும் விமர்சனத்திற்குள்ளாகின. குறிப்பாக மமிதா பைஜூ பிரதீப் ரங்கநாதனுக்கு காதலை சொல்ல மண்டியிட்டிருப்பதைப் பார்த்து 'நீ என்ன பிட்டு படத்துல வர மாதிரி இருக்க' என நாயகன் கேட்பது பரவலாக விமர்சனம் செய்யப்பட்டது. இது குறித்து படத்தின் இயக்குநர் பேசுகையில் தனது நட்பு வட்டாரத்தில் இப்படி பேசுவது ரொம்ப சாதாரணமானது என கூறியிருந்தார். ஆனால் இந்த வசனம் கொச்சையாக இருப்பதாகவும் அதனை இயக்குநர் நியாயப்படுத்துவதாகவும் நெட்டிசன்கள் அவரை விமர்சித்தனர். 

Continues below advertisement

இயக்குநருக்கு மெசேஜ் செய்த ரசிகர்

டியூட் படத்தை பார்த்த ரசிகர் ஒருவர் இயக்குநருக்கு மெசேஜ் செய்துள்ளார். அதில் அவர் இந்த வசனம் குறித்த தனது விமர்சனத்தை தெரிவித்துள்ளார். இத்துடன் படத்தில் காட்சிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்பில்லாமல் இருப்பதாகவும் மொத்தமாக பார்க்க ரீல்ஸ்களை ஒன்றாக ஒட்டி வைத்தது போல் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இதற்கு இயக்குநர் கீர்த்திஸ்வரன் 'எனக்கு மெசேஜ் செய்வதற்கு பதிலாக உனக்கென்று ஒரு வாழ்க்கையை உருவாக்கிக் கொள்' என்று பதிலளித்துள்ளார். இதனை அந்த நபர் ஸ்கிரின்ஷாட் எடுத்து இணையத்தில் வெளியிட அது தற்போது வைரலாகி வருகிறது.