லவ் டுடே படத்தை இயக்கி தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள பிரதீப் ரங்கநாதன், தனது முகநூல் பக்கத்தை டெலிட் செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

Continues below advertisement

லவ் டுடே வெற்றி:

சமீபத்தில் வெளியாகி 2கே கிட்ஸ்களால் கொண்டாடப்பட்டு வரும் படம், லவ் டுடே. இப்படத்தை இயக்கிய பிரதீப் ரங்கநாதனே, இதில் ஹீரோவாகவும் நடித்திருந்தார். அது மட்டுமன்றி, இப்படத்தின் பாடல், வசனம், திரைக்கதை என அனைத்தையும் எழுதியதும் அவரேதான்.

Continues below advertisement

இதற்கு முன்னர், இவர் ஜெயம் ரவியை வைத்து இயக்கியிருந்த கோமாளி படம் மெகா ஹிட் அடித்ததை தொடர்ந்து, இவருக்கு லவ் டுடே படத்தினை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. காலத்திற்கு ஏற்றார்போல் மாற்றப்படும் காதல், தற்போது 2கே கிட்ஸ்கள் மத்தியில் எந்த நிலையில் இருக்கிறது என்பதை, சிறப்பாக படத்தில் காட்டியுள்ளதாக படம் பார்த்த அனைவரும் பிரதீப்பை பாராட்டினர். இவ்வளவு ஏன், சூப்பர் ஸ்டார் ரஜினியே பிரதீப்பை பொன்னாடை போர்த்தி பாேர்த்தி, படத்தின் வெற்றிக்காக வாழ்த்தினார். தற்போது, இப்படம் 50 கோடி வசூலைக் கடந்து வெற்றி நடைபோட்டு வருகிறது. 

யுவன் சங்கர் ராஜா இசையில் லவ் டுடே படத்தில் இடம் பெற்றிருந்த அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்டாகி வருகின்றன. இந்த படத்தில் உள்ள பாடல்களின் மேக்கிங் வீடியோவில் கூட, பிரதீப் “பழைய யுவனைப் பாக்கனும் சார்” என யுவனிடம் டைலாக் பேசுவது போல காட்சியமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், யுவன், நடிகர் விஜய் உள்பட பல்வேறு பிரபலங்கள் குறித்து லவ் டுடே இயக்குனர் 10 வருடங்களுக்கு முன்னர் போட்டிருந்த ஃபேஸ் புக் பதிவுகள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன.

 

பிரதீப்பின் பழைய பதிவுகள்!

90’ஸ் கிட்ஸ்களின் மத்தியில் முதலில் பிரபலமாக இருந்த முதல் சமூக வலைதளம் ஃபேஸ்புக்தான். இந்த தளம் வந்த புதிதில், செல்ஃபி அப்லோட் செய்வது, பிடிக்காத பிரபலங்களை போஸ்ட் போட்டு திட்டுவது என பலரும் ஆடாத ஆட்டம் ஆடினர். சிறிது வருடங்களுக்கு பிறகு அந்த பதிவுகளை திரும்பி வந்து பார்க்கையில், “நம்மளா இவ்வளவு க்ரிஞ்சாக இருந்தோம்..” என பலர் நினைத்ததும் உண்டு. தற்போது, அப்படியொரு செய்கையில்தான் பிரதீப்பும் வசமாக சிக்கியுள்ளார். 

சமீபத்தில் தான் கலந்து கொண்ட நேர்காணல்களில், யுவன் சங்கர் ராஜாவை தனக்கு சிறு வயதிலிருந்தே பிடிக்கும் எனக்கூறும் பிரதீப், 10 வருடங்களுக்கு முன்னர் வெளியிட்டுள்ள பதிவில், “யுவன் ஒரு வேஸ்ட்” என்ற போஸ்ட் ஒன்றை பதிவிட்டுள்ளாராம்.

இதனால், செம கடுப்பான யுவன் ரசிகர்கள், “அப்போது அப்படி கூறிவிட்டு நேர்காணல்களில் யுவனைப் பிடித்தது போல நடிப்பது ஏன்?” எனக்கூறி மீம்ஸ் போட்டு பிரதீப்பை கலாய்த்து வருகின்றனர். அது மட்டுமன்றி, திரைப்பிரலங்கள், பலர் குறித்து வெறுப்பை பரப்பும் வகையில் இவரது அப்போதைய பதிவுகள் இருந்ததாக கூறப்படுகிறது. 

ஃபேஸ்புக்கை விட்டு பிரதீப் ஓட்டம்?

தொடர் மீம்ஸ்களால், நெட்டிஸன்கள் பிரதீப்பை அட்டாக் செய்ய, அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தை டீ ஆக்டிவேட் செய்துள்ளதாக தகவல் பரவி வருகிறது. முழுப் பெயரைப் போட்டு தேடினாலும், பிரதீப்பின் பேஸ்புக் பக்கம் காண்பிக்க படாததால், பலரும் அவர் முகநூலை விட்டு ஓடியே விட்டார் என சமூகவலைதளங்களில் கலாய்த்து வருகின்றனர். இது ஒரு புறமிருக்க, சிலரோ “தப்பு செய்வது சகஜம்தான், எதற்கு அவருடை பழைய பதிவுகளை எடுத்து இப்போது கலாய்த்து வருகின்றனர்” என பிரதீப்பிற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.