பிரபு தேவா நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், நடன இயக்குநர் என்று பன்முக கலைஞராக திகழ்கிறார். இவரின் தந்தை ஒரு நடன இயக்குனர் என்பதால், இவரும் ஒரு நடன இயக்குனராக சினிமாவிற்குள் நுழைந்தவர். பின்னர் தன்னுடைய திறமைகளை வளர்த்து கொண்டு முன்னணி நடிகராகவும், தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் உயர்ந்தார்.


பிரபுதேவாவின் சகோதரர்களான ராஜூ சுந்தரம் டான்ஸ் மாஸ்டராக உள்ளார். பல படங்களில் டான்ஸ் காட்சிகளில் நடனம் ஆடியுள்ள இவர் சில திரைப்படங்களில் நடித்துளளார். அதே போல் நாகேந்திர பிரசாத்தும் சில படங்களில் நடித்துள்ளார். 



அப்படியே பிரபுதேவா ஜெராக்ஸ் மாதிரியே இருக்கும் மகள்... வைரலாகும் கியூட் புகைப்படம்!


'இந்து' படத்தில் ஹீரோவாக அறிமுகமான பிரபுதேவா, காதலன், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, வானத்தைப் போல, ஏழையின் சிரிப்பில், காதலா காதலா, அள்ளி தந்த வானம், உள்ளம் கொள்ளை போகுதே என்று மாஸ் படங்களில் நடித்த நடித்தார். திரைப்படம் இயக்க ஒரேயடியாக பாலிவுட் பக்கம் சென்ற இவர், இதை தொடர்ந்து 12 ஆண்டுகளாக தமிழ் பக்கமே வரவில்லை. 2004 ஆம் ஆண்டு திரைக்கு வந்த எங்கள் அண்ணா படத்திற்கு பின்னர், ஏ.எல்.விஜய் இயக்கத்தில் ' தேவி' படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்தார். 


சினிமாவில் பிஸியாக இருந்த போது பிரபுதேவா காதல் திருமணம் செய்து கொண்டார். குரூப் டான்ஸராக இருந்த ரமலத் என்ற முஸ்லீம் பெண்ணை தான் காதலித்து அப்பாவின் எதிர்ப்பையும் மீறி திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு அவர்களுக்கு 3 குழந்தைகள் பிறந்தன. 


பிரபுதேவாவிற்காக மதம் மாறிய ரமலத் தனது பெயரை லதா என்று கூட மாற்றிக் கொண்டார். அப்போதும் கூட குடும்பத்தினர் சமாதானம் ஆகவில்லை. அப்போது தான் பிரபுதேவாவின் மூத்த மகன் புற்றுநோயால் பதிக்கப்பட்டிருந்த நிலையில் 13ஆவது வயதில் அவர் இறந்தார். இதையடுத்து சினிமாவிலிருந்து விலகியிருந்த பிரபுதேவா வில்லு படத்தை இயக்கினார். இந்தப் படத்தில் விஜய் மற்றும் நயன்தாரா இருவரும் முன்னணி ரோலில் நடித்தனர். அப்போதுதான் பிரபுதேவா மற்றும் நயன்தாரா இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்தது.




ஒரு கட்டத்தில் ஒருவரும் ஒன்றாகவும் சேர்ந்துவாழ்ந்து வந்ததாக சொல்லப்பட்டது. இது பிரபுதேவாவின் மனைவி ரமலத் விஷயத்தில் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்தவே விவாகரத்து செய்யாமல் எப்படி இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழ முடியும் என்பது போன்று பஞ்சாயத்தை கிளம்பியது. எனினும் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இதையடுத்து பிரபுதேவா மற்றும் ரமலத் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். அதன் பிறகு பிரபுதேவா நயன்தாராவை திருமணம் செய்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.


ஆனால், இருவருக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பாடு இருவரும் பிரிந்தனர். அதன் பிறகு தான் பிரபுதேவா 2ஆவதாக பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரபுதேவாவிற்கு அவர் தான் முதுகு வலிக்கு சிகிச்சை அளித்து வந்துள்ளார். இதில், இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. அதன் பிறகு பெற்றோர் சம்மதத்துடன் பிரபுதேவா அவரை 2ஆவது திருமணம் செய்து கொண்டதாக சொல்லப்பட்டது.




பிரபுதேவா மற்றும் ஹிமானி சிங்கிற்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. ஏற்கனவே பிரபு தேவாவிற்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் இப்போது பெண் குழந்தை என்பதால் அவரது குடும்பத்தினர் இந்த மகிழ்ச்சியை கொண்டாடினார்கள்.  இவரது மனைவி அவ்வப்போது வெளியில் வந்தாலும், தன்னுடைய மகளை வெளியில் காட்டாமல் வளர்த்து வந்தார் பிரபு தேவா. இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன், பிரபுதேவா தனது 2ஆவது மனைவி மற்றும் மகளுடன் திருப்பதி கோயிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார், அப்போது முதல் முறையாக தன்னுடைய மகளையும் அழைத்து வந்திருந்தார். அப்படியே பிரபு தேவாவின் ஜெராக்ஸ் போல இருக்கும், அவரின் மகள் புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.