நடிகர் பிரபாஸ்
ஆந்திராவில் மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்டிருப்பவர் நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்திற்கு பின் பிரபாஸிற்கு பான் இந்திய நட்சத்திர அந்தஸ்த்து கிடைத்துள்ளது. பாகுபலி 2 படம் உலளவில் 1788 கோடி வசூலித்தது. இதற்கு அடுத்தபடியாக வெளியான ராதே ஷியாம் , ஆதிபுருஷ் ஆகிய படங்கள் பாக்ஸ் ஆபிஸ் ரீதியாக தோல்வியை சந்தித்தன. தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்த சலார் திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.
சலார் ரீரிலீஸ்
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது சலார். பிருத்விராஜ் , ஸ்ருதிஹாசன் , ஸ்ரியா ரெட்டி , ஈஸ்வரி ராவ் ஆகியோ இப்படத்தில் நடித்திருந்தார்கள். சலார் திரைப்படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களை பெற்றது. சலார் திரைப்படம் 700 கோடி மட்டுமே வசூலித்தது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்தது. இப்படத்திற்கு பெரிய வரவேற்பு இல்லாதது குறித்து இயக்குநரும் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார்.
சலார் திரைப்படம் வெளியாகி இரண்டு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் இப்படம் திரையங்கில் மீண்டும் வெளியாகிறது. முதல் முறை திரையரங்கில் வெளியானதைக் காட்டிலும் இப்படத்திற்கு ரசிகர்கள் அதிக வரவேற்பு கொடுத்துள்ளார்கள். வரும் மார்ச் 21 ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாக இருக்கும் நிலையில் முன்பதிவுகள் தொடங்கியுள்ளன. முன்பதிவுகள் தொடங்கியதும் டிக்கெட்கள் ராக்கெட் ஸ்பீடில் விற்றுத் தீர்ந்துள்ளன. முதல் நாளில் மட்டும் 27 ஆயிரம் டிக்கெட் சலார் படத்திற்கு இதுவரை விற்பனை ஆகியுள்ளன.
சமீப காலங்களில் பல படங்கள் ரீரிலீஸ் ஆகி வசூல் வேட்டை நடத்தி வரும் நிலையில் சலார் திரைப்படம் முதல் முறையைப் போலவே இந்த முறையும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சமூக வலைதளத்தில் ரசிகர்கள் இதுகுறித்த தங்கல் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்
பாகுபலி ரீரிலீஸ்
சலார் படத்தைத் தொடர்ந்து பிரபாஸ் நடித்த பாகுபலி திரைப்படமும் வரும் ஜூலை மாதம் ரீரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப் படுகிறது. பாகுபலி திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் ரசிகர்கள் இப்படத்தை திரையரங்கில் பிரம்மாண்டமாக கொண்டாட உற்சாகம் தெரிவித்து வருகிறார்கள். இதுகுறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்