Salaar Censor: கேஜிஎஃப் 1 & 2 பாகங்களை இயக்கி, கன்னட சினிமா பாக்ஸ் ஆஃபிஸை புரட்டிப்போட்டு ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்தவர் இயக்குநர் பிரசாந்த் நீல்.  இவரது அடுத்த படைப்பான சலார் படம் வரும் 22ஆம் தேதி உலகம் முழுவதும்  திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது. இந்த படத்திற்கு சென்சார் போர்டு 'A' சான்றிதழ் வழங்கியுள்ளது என கூறப்படுகின்றது.


சலார் ஏ சான்றிதழ்:


இப்படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. ட்ரெய்லர் பார்க்கும்போதே படத்தில் அதிகப்படியான சண்டைக்காட்சிகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும் தற்போது பேசப்பட்டு வரும் தகவலில் படத்தின் மொத்த நீளம் 2 மணி நேரம் 55 நிமிடங்கள் 22 நொடிகள் எனவும் கூறப்படுகின்றது. படக்குழு தரப்பில் யு/ஏ சான்றிதழ் பெற போராடி வருவதாகவும் கூறப்படுகின்றது. 


சுமார் 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள இப்படத்தின் ட்ரைலர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ட்ரைலர் மொத்தம் 3.47 நிமிடங்கள் படக்குழு தரப்பில் வெளியிடப்பட்டுள்ளது. நட்பை  மையப்படுத்தி அமைக்கப்பட்டுள்ள படத்தின் மைய்யக்கரு அமைக்கப்பட்டுள்ளது. படத்தில் ப்ரித்வி ராஜ் வில்லன் என தொடக்கத்தில் செய்திகள் வெளியானது. ஆனால் படத்தில் பிரபாஸ் மற்றும் ப்ரித்வி ராஜ் நண்பர்களாக நடித்துள்ளனர்.  அதேநேரத்தில் படத்தின் பாதி கதை முடிந்த பின்னர் அதாவது முதல் பாகம் முடியும்போது இருவரும் பகைவர்களாக மாறுகின்றனர். இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இது மட்டும் இல்லாமல், இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. இப்படம் வரும் 22ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகின்றது. 






வரும் டிசம்பர் 22ஆம் தேதி சலார் படம் வெளியாகும் என ஏற்கனவே படக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு பிரபாஸ் மற்றும் பிரசாந்த் நீல் ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. மேலும் ரத்தம் தெறிக்க பிரபாஸ் இடம்பெற்றிருக்கும் காட்சிகள் அவரது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. 


டங்கியுடன் மோதும் சலார்:


நடிகர் ஷாருக்கான் - ராஜ்குமார் ஹிரானி இணைந்துள்ள டங்கி படம் வரும் டிச.22ஆம் வெளியாகும் என சமீபத்தில் தான் தகவல்கள் வெளியான நிலையில், சலார் படமும் வெளியாவதால் இந்திய சினிமா திரையுலகில் பரபரப்பைக் கிளப்பும் வகையில் அமைந்துள்ளது.


பதான், ஜவான் படங்களின் மூலம் இந்த ஆண்டு இரண்டு முறை ஆயிரம் கோடி வசூலைக் குவித்து ஷாருக்கான் மாஸ் மகாராஜாவாக இந்திய பாக்ஸ் ஆஃபிஸில் வலம்  வரும் நிலையில் பிரபாஸ் அவருடன் தற்போது நேருக்கு நேர் மோத உள்ளது எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிற வைத்துள்ளது.


மேலும் பெரும் பொருட்செலவில் உருவாகியுள்ள நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் டிச.15ஆம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ள நிலையில்,  மும்முனைப் போட்டியில் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.