கல்கி 2898 ஏடி


நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துள்ள கல்கி படம் கடந்த ஜூன் 27 ஆம் தேதி வெளியானது. வைஜயந்தி மூவீஸ் தயாரித்துள்ள இப்படம் உலகளவில்  முதல் நாளில் 191 கோடி வசூலித்தது. தற்போது படம் வெளியாகி மூன்று நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது தயாரிப்பு நிறுவனம். இதன்படி கல்கி படம் முதல் மூன்று நாட்களில் உலகளவில் 415 கோடி வசூலித்துள்ளது. மொத்தம் 600 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் மூன்றே நாட்களில் படத்தின் பெரும்பாலான செலவை திருப்பி எடுத்துள்ளது.