ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ் , தமன்னா , ரானா டகுபதி , அனுஷ்கா , நாசர் , ரம்யா கிருஷ்ணன் , சத்யராஜ் ஆகியோ நடிப்பில் உருவான படம் பாகுபலி. சரித்திர கற்பனை கதையாக உருவான இப்படம் இந்திய சினிமாவில் ஒரு மைல் கல்லாக அமைந்தது. ஹாலிவுட்டில் வெளியாகும்  வரலாற்றுப் படங்களை பார்த்து வியந்து வந்த இந்திய ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்ளும் விதமாக பாகுபலி படம் அமைந்தது. இமாலைய பட்ஜெட் இல்லாமல் சுவாரஸ்யமான கதையும் கற்பனையை வைத்து உலகத்தரமான படத்தை உருவாக்கி காட்டினார் ராஜமெளலி. பாகுபலி முதல் பாகமும் சரி இரண்டாவது பாகமும் வசூல் சரி வசூல் ரீதையாக உலகளவில் சாதனைப் படைத்தன.

Continues below advertisement

பாகுபலி ரீரிலீஸ் வசூல் 

பாகுபலி படம் வெளியாகி கடந்த மே மாதத்துடன் 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனைக் கொண்டாடும் விதமாக கடந்த அக்டோபர் 31 ஆம் தேதி இரண்டு பாகங்களும் இணைக்கப்பட்டு பாகுபலி தி எபிக் என ரீரிலீஸ் ஆனது. 10 ஆண்டுகளுக்கு முன் படத்தை கொண்டாடிய ரசிகர்கள் இந்த முறையும் மிகபெரிய அளவில் வரவேற்பு கொடுத்துள்ளார்கள். வகையில் ரீரிலீஸ் படங்களில் அதிக வசூல் ஈட்டிய படமாக பாகுபலி சாதனை படைத்து வருகிறதுமுதல் நாளில் பாகுபலி திரைப்படம் ரூ 9.65 கோடி வசூலித்தது. இரண்டாவது நாளில் 7.25 கோடியும் மூன்றாவது நாளில் 6.3 கோடி வசூலித்தது. 4 ஆவது நாளில் 1.75 கோடியும் 5 ஆவது நாளில் 1.5 கோடியும் வசூலித்தது. இதுவரை இப்படம் 27.60 கோடி வசூலித்து விஜயின் கில்லி படம் ரீரிலீஸ் வசூலை முந்தியுள்ளது.

கில்லி வசூலை முறியடித்த பாகுபலி 

கடந்த 2023 ஆம் ஆண்டு திரையரங்கில் வெளியிடப்பட்ட கில்லி திரைப்படம் உலகளவில் விஜய் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. முதல் முறை வெளியான போது கில்லி படம் 50 கோடி வரை வசூலித்த நிலையில் ரீரிலீஸில் 26.5 கோடி வசூலித்தது. 

Continues below advertisement