Prabhas25 | பிரபாஸின் 25 வது படத்தை இயக்கும் பிரபல இயக்குநர்! - 8 மொழிகளில் வெளியிட திட்டம்!

இது ஒரு புறம் இருக்க நடிகர் பிரபாஸ் 'ஆதி புருஷ்' படத்திற்காக பிரபாஸ் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

Continues below advertisement

பாகுபலி என்ற பிரம்மாண்ட திரைப்படம் மூலமாக இந்திய சினிமாவில் பிரபலமானவர் நடிகர் பிரபாஸ். அதற்கு முன்னதாகவே பல படங்களில் நடித்திருந்தாலும் பாகுபலி படம் அவருக்கி மிகப்பெரிய அங்கீகாரத்தை ஏற்படுத்திக்கொடுத்தது. அதன் பிறகு பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாரன சாஹோ என்ற படத்தில் நடித்திருந்தார். படம்  கலவையான விமர்சனங்களையே பெற்றது. விமர்சன ரீதியாக எதிர்பாத்த வெற்றி கிடைக்கவில்லை என்றாலும்  வசூல் வேட்டை நடத்தியது. 'ராதேஷ்யாம்' படத்தில் நடித்து முடித்துள்ள பிரபாஸ்,தற்போது  ஆதிபுருஷ்’, ‘சலார்’ போன்ற படங்களை கைவசம் வைத்துள்ளார்.இந்த படங்களின் அப்டேட்டும் அவ்வபோது வெளியாகி வருகிறது. இந்நிலையில் பிரபாஸின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. “ஸ்பிரிட் “ என பெயர் வைக்கப்பட்டுள்ள படத்தை பிரபல இயக்குநர்  இப்படத்தை சந்தீப் ரெட்டி வங்கா இயக்க உள்ளார் . சந்தீப் ரெட்டி வாங்கா  விஜய் தேவரகொண்டாவின் நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி திரைப்படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது. தமிழிலும் கூட படத்தை ரீமேக் செய்திருந்தனர். அந்த படத்தில் விக்ரமின் மகன் துருவ் நடித்திருந்தார். 

Continues below advertisement

தற்போது உருவாக உள்ள பிரபாஸ் சந்தீப் ரெட்டி வங்கா கூட்டணியின் ‘ஸ்பிரிட்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம் , இந்தி உள்ளிட்ட 8 மொழிகளில் வெளியாக இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஸ்பிரிட் திரைப்படம் பிரபாஸின் 25 வது படம் என்பதால் இதனை பிரம்மாண்டமாக இயக்க இயக்குநர் முடிவெடுத்துள்ளாராம் இயக்குநர். இது குறித்த அறிவிப்பை நடிகர் பிரபாஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். ஸ்பிரிட் படத்தை பிரபல t series நிறுவனம் சார்பில் புஷன் குமாரும் , பத்திரகாளி பிக்சர்ஸும் இணைந்து தயாரிக்கவுள்ளனர்.ஆக்‌ஷன் டிராமாவாக இப்படம் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இது ஒரு புறம் இருக்க நடிகர் பிரபாஸ் 'ஆதி புருஷ்' படத்திற்காக பிரபாஸ் 150 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளன. அப்படி அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இந்தியாவில் அதிகப்படியான சம்பளம் வாங்கும் நடிகர் என்ற அங்கீகாரத்தை பிரபாஸ் பெருவார்.

Continues below advertisement
Sponsored Links by Taboola