பிரபாஸ் நடிக்கும் ஃபெளசி
ரெபெல் ஸ்டார் பிரபாஸ், இயக்குநர் ஹனு ராகவபுடி (Hanu Raghavapudi) இணையும் பான் இந்திய படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) ,எனத் தலைப்பிடப்பட்டுள்ளது !!அதிரடியான கான்செப்ட் போஸ்டருடன் துவங்கி, பரபரப்பை ஏற்படுத்திய ப்ரீ-லுக் போஸ்டருக்குப் பிறகு, ரெபெல் ஸ்டார் பிரபாஸ் நடிக்க, ஹனு ராகவபுடி இயக்கும், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்திய பான்-இந்தியா படத்தின் தலைப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில், டி சீரிஸ் நிறுவனத்தின் குல்ஷன் குமார் வழங்க, பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு “ஃபௌசி” (Fauzi) எனப் பெயரிடப்பட்டுள்ளது.
“ஃபௌசி” (Fauzi) எனும் தலைப்பே ஒரு சிப்பாயாக பிராபாஸின் பாத்திரத்தையும், வீரத்தையும் அடையாளப்படுத்துவதாக அமைந்துள்ளது. உறுதியான, அழகிய வடிவமைப்பில் இருக்கும் தலைப்பு டிசைன், வீரத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது. 1940களின் இந்திய சுதந்திரப் போராட்டத்தின் பின்னணியில் அமைந்துள்ள இந்த படத்தின் போஸ்டரில் எரிந்து, கிழிந்த ஆங்கிலேயர்களின் கொடியும், அதைச் சுற்றியுள்ள தீக்கதிர்களும் புரட்சியின் சூட்டையும் எதிர்ப்பின் சக்தியையும் நினைவூட்டுகின்றன.
போஸ்டரில் பின்னணியில் காணப்படும் சமஸ்கிருத சுலோகங்கள் மற்றும் குறியீட்டு வடிவங்கள், இந்தக் கதையில் உள்ள புராண மற்றும் வரலாற்று அடுக்குகளைக் குறிக்கின்றன. குறிப்பாக மகாபாரதத்தில் கர்ணன் பற்றிய குறிப்புகள், விசித்திரமான விதியை எதிர்கொள்ளும் நாயகனின் பாத்திரத்தை வலியுறுத்துகின்றன.
அந்த சுலோகங்கள் அவர் பார்த்தா (அர்ஜுனன்) போல பத்மவ்யூஹத்தை வென்றவர், கர்ணன் போல வீரத்துடன்