OG Box Office: ஆந்திர மாநில துணை முதலமைச்சர் பவன் கல்யாண். தெலுங்கு திரையுலகின் சூப்பர்ஸ்டாரான சிரஞ்சீவியின் சகோதரரான இவர் தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராகவும் உலா வருகிறார். தெலுங்கு திரையுலகின் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவரது நடிப்பில் நேற்று ஓஜி திரைப்படம் வெளியானது. 

Continues below advertisement

154 கோடி:

கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட பவன்கல்யாணின் முந்தைய படமான ஹரிஹர வீரமல்லு தோல்விப்படமாக அமைந்த நிலையில், இந்த படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியிருந்த இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

படம் முதல் நாள் மட்டும் ரூபாய் 154 கோடி வசூலை குவித்துள்ளது. படத்தின் தயாரிப்பு நிறுவனமா டிவிவி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் இந்த தகவலை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. இது படக்குழுவையும், பவன் கல்யாண் ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Continues below advertisement

எகிறப்போகும் வசூல்:

இந்தியாவில் மட்டும் படத்தின் வசூல் ரூபாய் 100 கோடியை நெருங்கியுள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை நாள் என்பதால் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஹரிஹர வீர மல்லு படம் தோல்வி அடைந்த நிலையில், இந்த படம் வசூலை குவித்து வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளது.

பிரபாஸ் நடித்த சாஹு திரைப்படத்தை இயக்கிய சுஜித் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் பவன் கல்யாணுடன் இணைந்து இம்ரான் ஹஸ்மி, ப்ரியங்கா மோகன், அர்ஜுன் தாஸ், ஸ்ரேயா ரெட்டி, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ரவி கே சந்திரன், மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்துள்ளனர். தமன் இசையமைத்துள்ளார். 

அதிக விலைக்கு விற்றதுதான் காரணமா?

250 காேடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் தற்போது ரூபாய் 154 கோடியை எட்டியுள்ள நிலையில், அடுத்த இரண்டு நாட்களில் படத்தின் பட்ஜெட்டை கடந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

படத்தின் வசூல் குவிந்து வந்தாலும், இந்த படத்திற்கு ரூபாய் 1000 வரை டிக்கெட் விலை விற்பனை செய்ய ஆந்திர அரசு அனுமதி அளித்ததற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏனென்றால், துணை முதலமைச்சர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி டிக்கெட் விலையை உயர்த்தி விற்பனை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

கேங்ஸ்டர் படம்:

மேலும், அவரது முந்தைய படங்கள் எதிர்பார்த்த வெற்றியை பெறாத சூழலில், இந்த படத்தை வெற்றிப்படமாக மாற்ற வேண்டும் என்பதற்காக டிக்கெட் விலையை உயர்த்தியுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கேங்க்ஸ்டர் கதைக்களமாக இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தில் ஓஜாஸ் கம்பீரா என்ற கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடித்துள்ளார். வழக்கமான மசாலா கலந்த ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.