டாக்டர், டான் ஆகிய இரண்டு வெற்றிப்படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன் அடுத்து நடிக்கும் திரைப்படம் மாவீரன். மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த திரைப்படம் தமிழில் 'மாவீரன்' என்றும் தெலுங்கில் 'மகாவீருடு' என்ற பெயரிலும் உருவாகவுள்ளது. முன்னதாக, இந்த திரைப்படத்தில் கவுண்டமணி நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இவர் சிவகார்த்திகேயனின் பெரியப்பா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகக் கூறப்பட்டது.
நகைச்சுவை கலந்த நடிப்புடன் கலக்கி வரும் சிவகார்த்திகேயனுடன் கவுண்டமணி ரீ என்ட்ரி கொடுப்பது இருவருக்குமே சிறந்த அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது திரையில் சிவகார்த்திகேயனுக்கு காமெடி ஜோடியாக சூரி இருந்துவரும் நிலையில் இந்த காம்போவை கவுண்டமணி - சிவகார்த்திகேயன் காம்போ பீட் செய்யுமா என்பதை காத்திருந்துதான் பார்க்க வேண்டும். சிவாவிற்கு ஜோடியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவுள்ளார். வில்லனாக இயக்குநர் மிஸ்கின் நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக பிரபல யூடியூபரும் ரியாலிட்டி ஷோவில் கலக்கியவருமான மோனிஷா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது சென்னையில் முதற்கட்ட ஷூட்டிங் தொடங்கியுள்ள நிலையில் சிவாவின் குடும்பம் தொடர்பாக காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதில் சிவாவின் அம்மாவாக சரிதா நடிக்கிறார்.அதே ஷூட்டிங்கில் யூடியூபர் மோனிஷாவும் பங்கேற்றதாக கூறப்படுகிறது.
ப்ளாக்ஷிப் யூடியூப் மூலம் காமெடியை ட்ராக்கை கையில் எடுத்து ரசிகர்களை கவர்ந்த மோனிஷா, பின்னர் கலக்கப்போவது யாரு சீசன் 8ல் கலந்துகொண்டு இரண்டாவது இடத்தை பிடித்தார். சோஷியல்மீடியாவில் பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை வைத்துள்ள மோனிஷா சினிமாவில் கலக்குவார் என ரசிகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.