தமிழ் திரையுலகில் உச்சநட்சத்திரமாக திகழும் தளபதி விஜய் தனது 49வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். ட்விட்டரில் விஜய்யின் ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி இந்தியா அளவிலான ட்ரெண்டிங்கில் டாப் லிஸ்ட் ஆனது. ரசிகர்களும் பிரபலங்களும் தளபதி விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன் சமூக வலைதளங்களை நிரப்பினர். 


திரையுலக பிரபலங்கள் மற்றும் நண்பர்கள் நடிகர் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில், இன்று அதாவது ஜூன் 23ஆம் தேதி தென்னிந்திய திரையுலகின் டாப் கதாநாயகிகளில் ஒருவரான பூஜா ஹெக்டே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் விஜய் இடம்பெற்றுள்ள வீடியோவைப் பதிவிட்ட வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.


அந்த வீடியோவில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டே தான் நடித்த படத்தில் ஹிட் அடித்த  பாடலான 'புட்ட பொம்மா' பாடலுக்கு நடனமாடும் வீடியோவைப் பகிர்ந்துள்ள பூஜா, "நேற்று  தளபதி விஜயின் பிறந்தநாள் என்பதால்  இருந்து எனது தொலைபேசியில் இந்த சிறிய ரத்தினம் உள்ளது" என்று எழுதி பயன்படுத்தினார். 


வைரலாகி வரும் வீடியோவில் விஜய் மற்றும் பூஜா இரண்டு சிறிய குழந்தைகளுடன் 'புட்ட பொம்மா' பாடலுக்கு அதன் சிக்னேச்சர் ஸ்டெப் எனப்படும் நடனத்தினை ஆடுகின்றனர். 


கடந்த 2021 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ‘மாஸ்டர்’ படம் வெளியானது. இந்த படத்தில் முதல்முறையாக அவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜூடன் இணைந்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட் ஆன நிலையில், மீண்டும் இந்த கூட்டணி ‘லியோ’ படத்தின் மூலம் ஒன்றிணைந்தது. இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடிக்கிறார். அதுமட்டுமல்லாமல்  சஞ்ஜய் தத், சாண்டி மாஸ்டர், இயக்குநர்கள் கெளதம் மேனம், மிஷ்கின், பிரியா ஆனந்த், அர்ஜுன், மன்சூர் அலிகான்,மேத்தியு தாமஸ்,ஜோஜூ ஜார்ஜ், மடோனா செபாஸ்டியன் என ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். 






லியோ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரிலும், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையிலும் நடைபெறுகிறது. இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் மட்டுமே பாக்கியுள்ள நிலையில் படமானது அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என டைட்டில் வெளியான போதே அறிவிக்கப்பட்டது. இன்னும் 4 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அடுத்தடுத்து படத்தின் அப்டேட் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது. இதேபோல் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள் பல சுவாரஸ்யமான தகவல்களை வெளியிட்டதால் எதிர்பார்ப்பு எகிறியது.


இதனிடையே இன்று விஜய் தனது 49வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனை முன்னிட்டு இன்று லியோ படத்தில் இடம் பெற்றுள்ள நடிகர் விஜய் பாடிய ‘நா ரெடி’ பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ப்ரோமோ  ஜூன் 20ஆம் தேதி வெளியாகி வரவேற்பை பெற்றது. மேலும் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு அவரின் ஹிட் படங்கள் திரையிடப்படுகின்றன. 


இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் ட்ரீட் தரும் வகையில் லியோ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.