மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி வரும் திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கியின் நாவலை தழுவி இந்த படம் எடுக்கப்படுகிறது. இந்த படத்தில் ஜெயம் ரவி, விக்ரம், சரத்குமார், கார்த்தி, பார்த்திபன், த்ரிஷா, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்ட மிகப்பெரும் நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில், சுந்தர சோழராக, பிரகாஷ் ராஜ் நடிக்க, சின்ன பழுவேட்டரையராக பார்த்திபன், கார்த்தி, வந்தியத்தேவனாக, ஆதித்த கரிகாலனாக விக்ரம், பெரிய பழுவேட்டரையராக சரத்குமார் நடித்து வருகிறார். அதேபோல் குந்தவையாக, த்ரிஷாவும், பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி, ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராம் நடித்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்த படத்தின் படப்பிடிப்பு உருவாகி வருகின்றது. எடிட்டிங் பணியை ஸ்ரீதர் பிரசாத் மேற்கொள்கிறார். ரவி வர்மன் படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்
வேகமாக படப்பிடிப்பு நடந்து வரும் நிலையில் அடுத்தக்கட்ட வேலைகளுக்கும் படக்குழு தயாராகிவிட்டது. அதன்படி பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை வெறித்தனமாக படக்குழு தயார் செய்து வருவதாகவும் ஜூலை முதல் வாரத்தில் டீசர் வெளியிடப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரம்மாண்ட படம் என்பதால் டீசர் வெளியீட்டையே பிரம்மாண்டமாக நடத்த படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும், இதற்காக தஞ்சாவூரை படக்குழு தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. பொன்னியின் செல்வன் படத்துக்கும் தஞ்சாவூருக்கும் மிக நெருக்கமான தொடர்பு இருப்பதால் தஞ்சையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.