Ponniyin Selvan Audio Launch LIVE: வெளியானது பொன்னியின் செல்வன் ட்ரெய்லர்..மகிழ்ச்சியில் ரசிகர்கள்

Ponniyin Selvan Trailer and Audio Launch LIVE Updates: சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இன்று பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா துவங்கியது

கீர்த்தனா Last Updated: 07 Sep 2022 09:33 AM

Background

இயக்குநர் மணிரத்னத்தின் 'பொன்னியின் செல்வன்' படத்தின் பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு(Ponniyin Selvan Audio Trailer Launch) விழா இன்று (செப்.06) நடைபெறுகிறது.கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் ’பொன்னியின் செல்வன்’ படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது....More

"அலாதியான இன்பம் வருகிறது; இந்த வாய்ப்பை அளித்த மணி சாருக்கு நன்றி!" - நடிகை திரிஷா

Trisha :


"இந்தப் படத்தைப் பற்றி நான் கூறும்போது அலாதியான இன்பம் வருகிறது; இந்த வாய்ப்பை அளித்த மணி சாருக்கு நன்றி!" - நடிகை திரிஷா


இந்தக் கூட்டத்தை பார்க்கும் போது முதலில் என் கண்ணே பட்டுவிடும் போலிருக்கிறது. ரஜினி சார் கமல் சாரை எத்தனை முறை பார்த்தாலும் ஒவ்வொரு முறையும் வாவ் என்றே சொல்ல வைக்கிறது.


 2கே கிட்ஸ் முதல் அனைவருக்குமே இந்த படம் சிறப்புரிமை, ஆசீர்வாதம், சிறந்த படம் என்று நான் என்ன வார்த்தை கூறினாலும் எனக்கு அது குறைவாகவே தோன்றுகிறது. அதைத்தாண்டி அதற்கு குறவாகவே தோன்றுகின்றது. அதை தாண்டி உள்ளுக்குள் ஒரு அலாதியான இன்பம் வருகிறது.


இந்த வாய்ப்பை கொடுத்த மணி சாருக்கு மிக்க நன்றி என்றார்.