Ponniyin Selvan Press Meet LIVE : பொன்னியின் செல்வனில் எனது கைவண்ணம் எதுவும் இல்லை...மணிரத்னம் பதில்
Ponniyin Selvan Press Meet LIVE Updates: பொன்னியின் செல்வன் படம் தொடர்பாக படக்குழுவினர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவிக்கும் தகவல்களை காணலாம்.
பேச்சி ஆவுடையப்பன் Last Updated: 18 Sep 2022 05:04 PM
Background
இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் படம் பற்றிய பல தகவல்களை தெரிவித்தனர். கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி,...More
இயக்குநர் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பில் படம் பற்றிய பல தகவல்களை தெரிவித்தனர். கல்கியின் ’பொன்னியின் செல்வன்’ நாவலைத் தழுவி அதே பெயரில் பொன்னியின் செல்வன் என்ற படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், ஜெயராம், சரத்குமார், ஐஸ்வர்யா லட்சுமி, விக்ரம் பிரபு உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். பொன்னியின் செல்வன் ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா கடந்த செப்டம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது. 5 மொழிகளில் உருவாகியுள்ள இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது. இதனை முன்னிட்டு படக்குழுவினர் தீவிர புரோமோஷனில் களமிறங்கியுள்ளனர். முன்னதாக விக்ரம், த்ரிஷா உள்ளிட்டோர் பொன்னியின் செல்வனில் தாங்கள் நடித்துள்ள கேரக்டர்களின் பெயர்களை ட்விட்டரில் பெயராக மாற்றிக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
= liveblogState.currentOffset ? 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow hidden' : 'uk-card uk-card-default uk-card-body uk-padding-small _box_shadow'">
Ponniyin Selvan Press Meet LIVE : பொன்னியின் செல்வனில் எனது கைவண்ணம் எதுவும் இல்லை...மணிரத்னம் பதில்
பொன்னியின் செல்வனில் என்ன இருக்கோ அதை மட்டும் தான் எடுத்திருக்கிறோம். எனது டச் எதுவும் இல்லை. மேலும் பொன்னியின் செல்வன் நாவலை படிக்கும்போதே நான் இதை ஒரு சினிமாவாக தான் பார்த்தேன் என மணிரத்னம் தெரிவித்துள்ளார்.