தீபாவளியை முன்னிட்டு வெளியான ப்ரின்ஸ்-சர்தார்:


கார்த்தியன் நடிப்பில் பல நாட்களாக படப்பிடிப்பில் இருந்த சர்தாரும், சிவகார்த்திகேயன் நடிப்பில் காதல்-காமெடி படமாக உருவான ப்ரின்சும் ஒரே நாளில் வெளியானது. தீபாவளியை முன்னிட்டு வெளியான இப்படங்கள் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகின்றன. 


ரசிகர்களை ஏமாற்றியதா ப்ரின்ஸ்?




காமெடி-காதல் படமாக உருவான ப்ரின்ஸ் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக வெளிநாட்டு நடிகை மரியா நடிக்க, சத்யராஜ் ஹீரோவின் அப்பாவாக நடித்திருந்தார். ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்புகளை உயர்த்திய இப்படம், ரிலீஸான முதல் நாளில் இருந்தே, பெரிய அளவில் நெகடிவ் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. சிலர், “சிவகார்த்திகேயனுக்கு காமெடி சென்ஸ் நன்றாகத்தான் உள்ளது. அதற்கென்று எல்லாப் படங்களையும் அதே போலவா தேர்வு செய்வது?” என்று ஆதங்கத்துடன் கேள்வியெழுப்புகின்றனர். 


படத்தில் சிவகார்த்திகேயனின் காமெடி, நடனம் மற்றும் பாடல்களை தவிர வேறு ஒன்றும் பேசப்படும் வகையில் இல்லை என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவிக்கின்றனர். 


 


கலவயான விமர்சனங்களுடன் சர்தார்:



கொரோனா காலங்களுக்கு முன்பே, சர்தார் படத்தின் பணிகள் தொடங்கி விட்டன. நல்ல நடிப்புக்கு பெயர் போன நடிகர் கார்த்தி, இப்படத்தில் பல கெட்-அப்புகளில் நடித்துள்ளதாலும், பல்வேறு லொக்கேஷன்களில் படம் படம்பிடிக்க பட்டதாலும், மக்களின் மத்தியில் இப்படத்திற்கு பலத்த் எதிர்பார்ப்புகள் எழுந்தது. ரசிகர்களின் பல நாட்கள் காத்திருப்பிற்கு பிறகு இப்படம் நேற்று வெளியானது. சிலர், படம் ஓகே, சுமார் என்றும் கூற, சிலரோ படத்தை ஆஹா ஓஹோ என்று பாராட்டி தள்ளுகின்றனர். 


ப்ரின்ஸ்-சர்தாரை ‘பீட்’ செய்த பொன்னியின் செல்வன்


விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, பார்த்திபன் உள்ளிட்ட பல்வேறு நட்சத்திரங்களின் நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் கடந்த மாதம் 30ஆம் தேதி வெளியாகிய படம் பொன்னியின் செல்வன். ரிலீஸான நாளிலிருந்து இன்று வரை தொடர்ந்து கோடி கோடியாக வசூல் புரிந்து வரும் இப்படம், தற்போது 450 கோடி ரூபாயை கடந்து 500 கோடி வசூலை நோக்கி பயணம் செய்து கொண்டிருக்கிறது. இதுவரை வெளியாகியுள்ள தமிழ் படங்களில் இவ்வளவு பெரிய வசூலை செய்த ஒரே படம் என்ற பெயரை பென்னியின் செல்வன் பெற்றுள்ளது. 






சர்தார் படம் வெளியான முதல் நாளில் 8 கோடி ரூபாய் வசூல் செய்ய, ப்ரின்ஸ் படம் சுமார் 5 கோடி ரூபாயுடன் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனயை துவக்கியது. இது தமிழகத்தில் மட்டும் செய்யப்பட்ட வசூலாகும். 


இந்நிலையில், தீபாவளி பரிசாக ஃப்ரஷாக வந்திறங்கிய சர்தார் மற்றும் ப்ரின்ஸ் படங்களுக்கு மத்தியில், கடந்த மாதம் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் நேற்று தமிழ் நாட்டில் மட்டும் 2 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.